அண்மையச்செய்திகள்

Monday, 14 December 2015

திருச்சி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை , கைதான தோழர்கள் விடுதலையின் பின்னர் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதியை காக்க உறுதியேற்றனர்

திருச்சியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தோழர்கள் கைது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும்சென்னைக்கு துப்புறவு பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டும்,இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் ,எந்தவொரு இழப்பையும் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கமாட்டோம் என்கிற உறுதியோடும்,
அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து பகுதி தூய்மைத் தொழிலாளர்களையும் உடனே திரும்ப அனுப்பக்கோரி இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டச்  செயலாளர் தோழர் செங்கை குயிலி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்  தோழர்கள் பிச்சை அறிவழகன், லாசர், சித்ரா ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பின்னர் மாலையில் அனைத்து தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைக்குப்பின் அனைத்து தோழர்கள்ம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு தோழர் எழில்புத்தன்,தோழர் மணியரசு ஆகியோருடன் சென்று மாலை அணிவித்தனர்.No comments:

Post a Comment