அண்மையச்செய்திகள்

Monday, 28 December 2015

அரசியல் என்றால் 'வாக்கு'வங்கியை திரட்டுவது மட்டுமல்ல.. தற்காப்புப் படையை தயார் படுத்திக்கொள்வதும்தான்! - பொதுச்செயலாளர் -- ஆ நாகராசன்

அரசியல் என்றால் 'வாக்கு'வங்கியை திரட்டுவது மட்டுமல்ல..
தற்காப்புப் படையை தயார் படுத்திக்கொள்வதும்தான்!
"""""""""""""
விருதுநகர் மேற்கு மாவட்ட சாத்தூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் பாண்டியராஜ் தலைமையில் 27.12.2015 ஞாயிறு அன்று ஓ.மேட்டுப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி பொருளாளர் பாண்டியம்மாள், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெங்கடாசலபுரம், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அமீர்பாளையம், சின்னகொல்லபாளையம், உப்பத்தூர், சமத்துவபுரம், முள்ளிச்சேவல், சத்திரப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் 72 பேர் கலந்து கொண்டனர்.
எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போன அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி தூண்டுதலின் பேரில் 100.க்கும் மேற்பட்ட தேவர் சமூக குண்டர்கள் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
அந்த மிரட்டலுக்கு அஞ்சிடாத "அய்யா" அதியமானின் நீலச்சட்டை படை எதிர் தாக்குதலுக்கு தயாரானது, அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத காவல்துறை பேரவை தோழர்களை சமாதனப்படுத்தி, தாக்குதலுக்கு தலைமை தாங்கிய குண்டர்களில் இருவரை கைது செய்தது.
காவல்துறையின் கைது நடவடிக்கையை கேள்விப்பட்டு ஆத்திரம் கொண்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்து, நேரடியாக கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து பேரவை தோழர்களை தாக்கச்சொல்லி குண்டர்களை தூண்டுயுள்ளார்.
ஆளும் கட்சி ஒன்றிய செயலாளரின் அடாவடித்தனத்திற்கு அஞ்சிப்போன காவல்துறை, பிரச்சினையை மேலும் வளரவிடாமல் தடுப்பதற்கு பேரவை தோழர்களிடம் நல்லவர்கள் போல் நாடகமாடி, மினி பேரூந்து ஒன்றை வரவழைத்து தோழர்களை அதில் ஏற்றிக்கொண்டு முன்னும் பின்னும் போலீஸ் வாகன பாதுகாப்போடு! சாத்தூர் பேரூந்து நிலையம் வரை கொண்டுவந்து விட்டுள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க அம்மாவின் அடிமைகள் தங்களது விசுவசத்தை அம்மாவிடம் காட்டுவதற்கு இதைப்போன்று பல மிரட்டல்களை பேரவையினர் மீது காட்டுகின்றனர்,
ஏற்கனவே அந்த பகுதிக்குள் நுழைய விடாமல் டாக்டர்.கிருஷ்ணசாமியை மிரட்டியவர்கள், அருந்ததியர் இயக்கங்கள் எதையும் வரவிடாமல் பார்த்துக்கொண்டவர்கள், இப்போது பேரவை மீது பாய்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சாத்தூர் டி.எஸ்.பி எஸ்.குமார் என்பவர் பேரவையின் ஒன்றிய செயலாளர் தம்பி பாண்டியாராஜிடம்,
கூட்டம் நடத்துவதற்கு ஏன்? அனுமதி வாங்கவில்லை! அரங்ககூட்டமாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் ஏன்? நடத்தினாய்! என்று மிரட்டி தனது செல் போனில் ஒன்றிய செயலாளரின் புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்துள்ளார்.
அதைக்கண்டு அஞ்சிடாத பாண்டியராஜ், இன்று நூறு பேர்தான் கூடினோம்! நாளை ஆயிரம் பேர் கூடினால் அவர்களால் என்ன செய்ய முடியும். முடிந்தால் பாதுகாப்பு கொடுங்கள் இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள் நாங்களே! எங்களை பாதுகாத்து கொள்கிறோம், என்று துணிவோடு பதில் அளித்துள்ளார் டி.எஸ்.பி.யிடம்.
இந்த துணிவும், அரசியல் தெளிவும் அய்யா நமக்கு கற்றுத்தந்த பாடம். அவர் வழியில் அஞ்சிடாமல் நடப்போம்! அரசியல் அதிகாரத்தில் இடம்பெற அயராது உழைப்போம்!!
ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடு அ.தி.மு.க. வின் வாக்குவங்கியை சரித்து வருவதால் இப்பேற்பட்ட அடக்குமுறைகளை நம் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டதும் இயல்புதான்! இனிமேலும் தொடர்வார்கள் என்பதும் எதார்த்தம்தான்!!
அரசியல் என்றால் 'வாக்கு'வங்கியை திரட்டுவது மட்டுமல்ல..
தற்காப்பு படையை தயார் படுத்திக்கொள்வதும்தான்!
எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்!
எதுவாக இருந்தாலும்!!
==>பொதுச்செயலாளர்.
28.12.2015

No comments:

Post a Comment