அண்மையச்செய்திகள்

Tuesday, 15 December 2015

மலிவான விளம்பரம்! மக்களுக்கு பயன்படாது!! -ஆ.நாகராசன் பொதுச்செயலாளர். ஆதித்தமிழர் பேரவை.

மலிவான விளம்பரம்!
மக்களுக்கு பயன்படாது!!
"""""""""""""""""""""
சினிமாக்கரர்களை சீண்டினால்தான்! சீரியசாக  பேசப்படும், என்பது ஒருவித அரசியல் உத்தி!

சிம்பு-அனிரூத் பாடலுக்கு எதிராக இன்று போராடும் பெண்ணிய அமைப்புகள்,
பெண் DSP விஷ்ணுப்பிரியா ஆணாதிக்கம் நிறைந்த காவல்துறையில் எப்படிப்பட்ட கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மரணித்திருப்பார், என தெரிந்தும் அன்று மௌனம் காத்தவர்கள்!

திருச்செங்கோடு கல்லூரி மாணவி காயத்திரி மர்மமரணம் அடைந்தபோது மௌனம் காத்தவர்கள்!

துப்புரவு தொழிலாளர்களை அவமதிக்கும் காட்சிகள் அரங்கேறிய திரைப்படங்களை எதிர்ப்பதற்கு முன்வராது, மௌனம் காத்தவர்கள்!

இப்போது மட்டும்! ஏன் இந்த ஆவேஷம்,?

சினிமாக்காரர்களை சீண்டினால்தான்! சீக்கிரம் விளம்பரம் கிடைக்கும் என்பதாலா? இல்லை! விஷ்ணுப்பிரியாவும், காயத்திரியும் தலித்துகள் என்பதாலா?

நடிகர் சிவக்குமார் அவர்களின் மகன் நடிகர் கார்த்திக், சென்னையில் குவிந்து கிடந்த குப்பைகளை கூட்டி அள்ள "அரசுதான்" வரவேண்டும் என எதிர்பார்க்காமல்,

நமது! பகுதி குப்பைகளை நாமே! சுத்தம் செய்து கொள்ளலாம் என மக்களுக்கு அழைப்புக்கொடுத்தது மட்டுமல்லாது, துப்புரவுப்பணி என்பது ஒரு "சமூகம்" சார்ந்தது அல்ல! என்று சொல்லி குப்பைகளை கூட்டிப் பெருக்கினாரே! அதை பாராட்ட மனமில்லையே!

துப்புரவுப் பணியாளர்களின் பற்றாக்குறையை போக்க அண்டை மாநிலத்தில் இருந்து அதிகப்படியான துப்புரவு பணியாளர்களை  "இறக்குமதி" செய்யவேண்டும் என்று!

அடிமைகளையும், பொருட்களையும் இறக்குமதி செய்வதுபோல் அறிக்கை கொடுத்த தலித் தலைவவரை கண்டிக்க வேண்டும் என உங்களது நுண்ணறிவுக்கு எட்டவில்லையே!

ரோட்டை மட்டும் சுத்தம் செய்து, பிளீச்சிங் பொடியை தூவிவிட்டு ஓடுப்போய் விடுகின்றனர் துப்பரவாளர்கள், ஒவ்வொறு வீட்டிற்கும் சுத்தம் செய்ய வருவதில்லை! என்று நக்கலடித்து பேட்டி கொடுத்த வைகோ-விடம்

ஒவ்வொறு வீட்டிற்கும் வந்து அவர்கள் மலம் கழித்தபிறகு ஒவ்வொறுவருடைய "பின்புறத்தையும்" கழுவுவதற்கு துப்பரவாளர் ஒருவர் வரவேண்டுமா? என்று கேள்வி எழுப்ப துணிவில்லையே!

என்ன செய்வது!!!
சினிமாக்காரர்களை சீண்டினால்தான் விளம்பரம் மலிவாக கிடைக்கிறது!
எதிர்ப்பு குறைவாக இருக்கிறது!!

என்ன? அரசியலோ!
என்ன? ஜனநாயகமோ!!

உடனே!
சினிமாக்கரர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு முனு முனுக்காதீர்!

பெண்ணியதிற்கு எதிரான கருத்து எந்த வடிவில் வந்தாலும்! அது திரைப்படமாக இருந்தாலும் எதிர்த்து நிற்பதில்!
நாங்கள் முன்வரிசைதான்!
__________________
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment