அண்மையச்செய்திகள்

Tuesday 5 January 2016

(5-1-2016) மண்னுரிமைப்போராளி தளபதி கிட்டு அவர்களின் நினைவு நாள் , அவரின் நினைவிடமான செங்கப்பள்ளியில் ஆதிததமிழர் பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

(5-1-2016) மண்னுரிமைப்போராளி தளபதி கிட்டு அவர்களின் நினைவு நாள் ............
சாதியத்திற்கு எதிராக எந்த சமரசமும் இன்றி இறுதி வரை போராடிய போராளி கையால் மலம் அல்லும் தடைச்சட்டத்திற்காக ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாநிலம் தழுவிய இரயில் மறியல் போராட்டத்தை திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தலைமையேற்று நடத்தியவர்
2002.ல்.பேரவையின் பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.நாகரசன் தலைமையில் நிலமீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு அரசின் அடக்கு முறைக்கு எதிராக போராடி முப்பத்தி இரண்டு நாட்கள் சேலம் மத்திய சிறையில் இருந்தவர் உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வழியுறுத்தி பேரவை சார்பாக ஒன்றிய மாநாடுகள் நடத்திய போது ஊத்துக்குளி ஒன்றியத்தில் தலைமையேற்று உள் இடஒதுக்கீடு பொதுக்கூட்டம் நடத்தியவர்
உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தாரபுரத்திலிருந்து சக்தியமங்கலம் வரை பேரவை நடத்திய ஐந்து நாட்கள் நடைபயணத்தில் கலந்து கொண்டவர் நிலமீட்பு போராட்டம் நடத்தி ஆக்கிரிப்பில் இருந்த பல நிலங்களை மீட்டு இருக்க இடம் அற்றவர்களுக்கு இருப்பிடங்களை ஏற்படுத்தி கொடுத்தவர்
இரட்டை டம்ளர்க்கு எதிராக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காவும் அவர்களின் விடுதலைக்காகவும் ஆதித்தமிழர்களின் அரசியல் அய்யா அதியமானின் தலைமையிலான ஆதித்தமிழர்பேரவை
முன் எடுத்த போராட்டங்களில் முன் வரிசையில் நின்று போராடிய போராளிக்கு ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் சுப்பனூர் மணி அவர்களின் தலைமையில் இன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது
வீர வணக்க நிகழ்வில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் மாவட்ட நிதிச்செயலாளர் சோழன் அமைப்பு செயலாளர் வீரக்குமார் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி ஊத்துக்குளி சக்திவேல் ஒன்றிய தலைவர் பாபு துணை பொதுச்செயலாளர் ச.சு.ஆனந்தன் ஆகயோர் கலந்து கொண்டு அவரின் நினைவிடமான செங்கப்பள்ளியில் வீரவணக்கம் செலுத்தினர் ...




No comments:

Post a Comment