அண்மையச்செய்திகள்

Sunday, 24 January 2016

சித்த மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

சித்த மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை
குறித்து நீதி விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
"""""""""""""""""""""""""
விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்திலுள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மோனிசா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 மாணவிகள் நேற்று கல்லூரி அருகிலுள்ள கிணற்றில் ஒன்றாக குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த துயரச்சம்பவம் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியின் பெற்றோர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் எடுத்த துயர முடிவின் காரணமாக அவர்களை இழந்து வாடும் குடுபத்தாருக்கு ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதேநேரத்தில் மூன்று மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன? என்பதை கண்டறிய உரிய நீதி விசாரணை மேற்கொண்டு எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்லூரியில் சேரும்வரை ஆசைவார்த்தை காட்டி கவர்ச்சி விளம்பரங்கள் செய்து, லட்சக்கணக்கில் பணத்தை பெற்று, கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் கல்லூரிகளை கட்டுப்படுத்த தவறிய அல்லது கண்டும் காணாது இருந்த தமிழக அரசின் மெத்தனப்போக்கே இந்த தற்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அடிமைகளைப் போல நடத்தியுள்ளது, கல்லூரி வளாகத்திலுள்ள முள் மரங்களை வெட்ட வைப்பது, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது, போன்ற வேலைகளை செய்யும்படி கட்டாயப் படுத்தியுள்ளது, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் அடியாட்களைக் கொண்டு மிரட்டியுள்ளது. மாணவிகள் பலர் பாலியல் சீண்டல்களும் உள்ளாக்கபடுவது போன்ற எண்ணற்ற தகவல்கள்களை பாதிக்கப்பட்ட மணவர்கள் கூறியதாக பத்திரிக்கை மற்றும் தொலக்காட்சி ஊடகங்களின் மூலம் தெரிய வருகிறது.
இப்பேற்பட்ட கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில்தான் மூன்று மாணவிகளும், கட்டிய பணத்தைக் கூட தரவேண்டாம் சான்றிதழ்களை மட்டும் கொடுத்தால் போதும் என்று மண்றாடிக் கேட்டும் கல்லூரி நிர்வாகம் தரமறுத்து மாணவிகளை மிரட்டியிருக்க வேண்டும், அதன் காரணமாகவே தற்கொலை முடிவுக்கு மாணவிகள் வந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இது சம்மந்தமாக பலமுறை தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ துறைக்கும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் மனுக்களை கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வந்துள்ளனர்.
ஆக, மாணவர்கள் கொடுத்த புகாருக்கு அப்போதைக்கே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயர சம்பவத்தை தவிற்திருக்கலாம், எனவே நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசு தான் சரண்யா, பிரியங்கா, மோனிசா ஆகிய 3 மாணவிகளின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இனிமேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மாணவிகளின் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தி அதற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து. உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்,
சித்த மருத்துவக் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்து கல்லூரியை இழுத்து மூடி, அதில் படித்துவரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதோடு,
அனைத்து தனியார் கல்லூரிகளிலும் உள்ள கட்டமைப்பு வசதிகள், கட்டண நிர்ணயம் போன்றவற்றை அரசு கண்காணித்து, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுருத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவண்
இரா.அதியமான்,
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
24.1.2016

No comments:

Post a Comment