அண்மையச்செய்திகள்

Wednesday, 20 January 2016

பீம் யாத்ரா குழு இன்று 20.1.16 அன்று கோவை வந்தடைந்தது இக்குழுவை ஆதித் தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் வரவேற்றார்

"மலக்குழியில் மனிதனை இறக்காதே" , "ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என இந்தியா முழுவதும் "பீம் யாத்ரா" என்ற தலைப்பில் பயணம் செய்யும் குழுவை தமிழகத்தில் கடந்த 14.1.16 அன்று சென்னையில் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதன் பின் இந்த பீம் யாத்திரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டு துப்பரவு பணியாளர்களுக்காக ஆர்பாட்டம் செய்து வருகிறது.பயணம் செல்லும் அணைத்து மாவட்டங்களிலும் அய்யா அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் படி ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டு எம் மக்களின் இழிவொழிக்க வேண்டிய தேவையை மக்களிடமும் இத்தொழிலில் தள்ளப்பட்ட தொழிலாளர்களை மீட்டெடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் முழங்கி வருகின்றனர்.
இன்று 20.1.16 இப்பயணம் கோவை வந்ததடைந்தது.இதில் ஓய்வில்லாமல் தமிழகம் முழுவதும் எம்மக்களின் விடியலுக்காய் பல போராட்டங்களிலும்,அரசிற்கு இழிவு தொழிலிலிருந்து எம்மக்களின் விடுதலை வேண்டி பல்வேறு நெருக்கடிகளையும்,எம்மக்களின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க பல அரசியல் காய் நகர்த்தல்களையும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்கஸ் வழியில் பயணித்து எம்மக்களை வழிநடத்திவரும் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் அவர்கள் கலந்துகொண்டு எம்மக்களின் இழிதொழிலை எம் தலைமுறையில் ஒழித்தே தீருவோம் என சூளுரைத்தார்,அதோடு எம்மக்களின் இழிநிலையை போக்கி அவர்கள் கையில் அரசியல் அதிகாரத்தை நிச்சயம் பெற்று தருவேன் என உறுதிபூன்டார்.
இதன் போது பீம் யாத்திரா குழுவினர் எம்மகளின் விடியலுக்காய் ஓய்வின்றி போராடிவரும் அய்யா அதியமான் அவர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவையினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.

அய்யா அதியமான் அவர்களின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்  


No comments:

Post a Comment