அண்மையச்செய்திகள்

Wednesday 13 January 2016

இன்று 14.1.16 சென்னையில் "பீம் யாத்ரா" வை அய்யா அதியமான் அவர்கள் தொடங்கி வைத்து இழிதொழிலை எம் தலைமுறையில் ஒழித்தே தீருவோம் என்று சூளுரைத்தார்

இன்று 14.1.16  காலை 11.மணிக்குசென்னையில் "பீம் யாத்ரா" வை அய்யா அதியமான் அவர்கள் தொடங்கி வைத்து இழிதொழிலை எம் தலைமுறையில் ஒழித்தே தீருவோம் என்று சூளுரைத்தார்

"எங்களை கொள்வதை நிறுத்துங்கள்" என்ற தலைப்பில்
புரட்சியாளர் அம்பேத்கரின் 125 வருடம் நினைவை போற்றும் வகையில் 125 நாட்கள் அசாம் தொடங்கி இந்தியா முழுவதும் சபஃய் கர்மாச்சரி அந்தோலன் சார்பில் நடைபெற்று வரும் "பீம் யாத்ரா" வை தமிழகத்தில் இன்று தலைநகர் சென்னையில் அய்யா அதியமான் அவர்கள் தொடங்கி வைத்தார் இதில் பொதுசெயலாளர் மற்றும் பேரவை மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
.
பீம் யாத்ராவின் மூலம் அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள்

1.எங்களை கையால் மலம் அல்ல நிர்பந்த படுத்திய வரலாற்று அநீதிகாகவும் பல நூற்றாண்டு கால இழி நிலைக்கு உட்படுத்திய குற்றத்திற்காகவும் துப்பரவு பணியாளர் சமூகத்திடம் பொது மன்னிப்பு கோர வேண்டும்
2. கையால் மலமள்ளும் பணிதடைச்சட்டம் மற்றும் மறுபுனரமைப்பு 2013 ஐ உடனடியாக எந்த கால தாமதமுமின்றி அதில் உள்ள அணைத்து அம்சங்களையும் முழுமையாக அமலாக வேண்டும் .
3, சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளினால் ஏற்படும் கொடூர மரணங்களை முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .சகடை மற்றும் கழிவு அகற்றும் பணிகளை எந்திரமயம் மற்றும் நவீன மயமாக்க வேண்டும் .
4.உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 1993 முதல் இறந்த துப்பரவு பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் எந்தவித குறுக்கீடு மற்றும் சிகளின்ரி வழங்க வேண்டும் .
5. கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் மறுபுனர்வாழ்வு மானியத்தொகை ரூ40,000 -த்தை ரூ2.லட்சமாக உயர்த்தி ஒரே தவணையில் உடனடியாக வழங்க வேண்டும் .












No comments:

Post a Comment