அண்மையச்செய்திகள்

Monday 18 January 2016

17.1.2016 அன்று திண்டுகல்லில் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆதித்தமிழர் பேரவையின் பொதுக்குழு நடைபெற்றது,இதில் ஒடுக்கப்பட்ட சமூகம் விடுதலை வேண்டி பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது



ஆதித்தமிழர் பேரவை
மாநில பொதுக்குழு கூட்டம்.
""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் "மாநில பொதுக்குழு" கூட்டம் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் தலைமையில் 17.1.2016 திண்டுக்கல் VGS மகாலில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய, மாநகர, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
"""""
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
""""""""""""""""
தீர்மானம்.1
இரங்கல் தீர்மானம்:-
""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் தொழிலாளர் அணி தேனி நகரச் செயலாளர் தோழர் சரவணன் அவர்கள் பணியின் போது மின்சாரம் தாக்கி விபத்தில் கடந்த 11.1.2016 மரணமடைந்தார், அவருக்கு இந்த கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்.2
அரசியல் தீர்மானம்:-
"''"""""""""""""
ஆதித்தமிழர் பேரவை தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமை இயக்கமாகவே பேரவை செயல்பட்டு வந்துள்ளது. எதிர்வரும் 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதே நிலபாட்டை தொடரும் என்று முடிவு செய்கிறது.

அத்துடன் அருந்ததியர் மக்களிடன் இருக்கும் எழுச்சியும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவாறு எதிவரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க அமைக்கும் கூட்டணியில் இடம்பெற்று தேர்தலில் பங்கெடுப்பது எனவும் முடிவு செய்கிறது.

அதனடிப்படையில் அருந்ததியர் மக்கள் அடர்த்தியாக உள்ள மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தாராபுரம், ராசிபுரம், அவிநாசி, பவானிசாகர் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரன்கோயில் ஆகிய ஐந்து தனித் தொகுதிளையும், சங்ககிரி, திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை ஆகிய மூன்று பொதுத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் எட்டு தொகுதிகளை தி.மு.க தலைமையிடம் அருந்ததியர் மக்கள் சார்பில் கேட்டுப்பெறுவது எனவும்,

இது சம்மந்தமாக விரைவில் தி.மு.க தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், மாண்புமிகு தளபதியார் அவர்களையும் நேரில் சந்தித்து மேற்கண்ட தீர்மானத்தை தோழமையுடன் வலியுறுத்துவது என இந்த பொதுக்குழு தீர்மானித்து முடிவு செய்கிறது.

தீர்மானம்.3
துப்புரவு தொழிலாளர் தீர்மானம்:-
""""""""""""""""
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி 1993 முதல் விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்களை கணக்கில் எடுத்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், அப்படி விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் புள்ளி விபரங்களை அரசே கணக்கெடுக்க வேண்டும் எனவும் இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களையும் கையால் மலமல்லும் தொழிலாளர்கள்தான் என அறிவித்திட வேண்டும் என்றும்,

துப்புரவு பணியில் உள்ள ஒப்பந்த முறையை முற்றிலுமாக ரத்து செய்து அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக மத்திய மாநில அரசுகள் அறிவித்திட வேண்டும் என இந்த பொதுக்குழு அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
_________
தலைமைக்காக
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.











No comments:

Post a Comment