அண்மையச்செய்திகள்

Sunday, 17 January 2016

தலித் உரிமை எழுச்சி பாடகர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கல் - அய்யா அதியமான் இரங்கல் அறிக்கை

தலித் உரிமை எழுச்சி பாடகர்
டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்
""""""""""""""
கிராமிய பாடல்கள் மூலம் தலித் மக்கள் விடுதலைக்கான பாடலை இசைத்த பேராசிரியர் புதுவை கே.ஏ.குணசேகரன் மறைவு செய்தி என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது, தோழருடன் இணைந்து 2000 ஆம் ஆண்டு கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல்துறைக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணவு பயிற்சியை நடத்திய நாட்கள் மறக்க முடியாத ஒன்று.

தோழர் குணசேகரன் அவர்களோடு பழகிய நாட்கள் இன்றும் மறக்க இயலாது நெஞ்சில் நிழலாடுகிறது. இடதுசாரி சிந்தனையாளராக இருந்து தலித்தியம் பேசி, தனது வெங்கலக்குரலால் தலித் விடுதலைக்கான கிராமிய எழுச்சி பாடல்களை பட்டி தொட்டிகளில் எல்லாம் முழங்கி தலித் மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டியவர்,

இன்குலாப்பின்
"மனுசங்கடா நாங்க! மனுசங்கடா" பாடல், "தொட்டாலே தீட்டுப்படுமா" "ஆக்காட்டி ஆக்காட்டி"
"அம்மா பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே" பாடல்களையும் இசைத்த விதம் இன்றும் நாடெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படியெல்லாம் இசைத்து வந்த அந்த வெங்கலக் குரலோன் இன்று இசைப்பதை நிறுத்திக்கொண்டார், அப்படி நிறுத்திக்கொண்டாலும் அவர் ஆயிரக்கணக்கான தலித்துகள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஆதித்தமிழர் பேரவை தனது வீரவணக்கத்தையும் அவரை இழந்து வாடும் குடுப்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவநர்
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment