அண்மையச்செய்திகள்

Wednesday, 20 January 2016

இன்று 20.1.2016 மதியம் 12 மணியளவில் பாளை தந்தை பெரியார் சிலை முன்பு சாதி வெறி ,மத வெறி ,மதுவெறி மற்றும் அரச பயங்கரவாதம், கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது (காணொளி )

இன்று 20.1.2016 மதியம் 12 மணியளவில் பாளை தந்தை பெரியார் சிலை முன்பு சாதி வெறி ,மத வெறி ,மதுவெறி மற்றும் அரச பயங்கரவாதம்,  கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது

.போராட்டத்தில்,

1.ஐதராபாத் தலித் மாணவர் படுகொலைக்கு காரணமான சாதி வெறியர்களை கைது செய்.

2.சென்னை கரபாக்கம் பகுதியில்  தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மலக்குழிக்குள் இறக்கி 4 பேர் படுகொலைக்கு காரணமான ஒட்டல் உரிமையாளரை கைது செய். கையால் மலம் அள்ள தடைச்சட்டம் இருந்தும் மலம் அள்ளுவதற்கு உட்படுத்திய மாநகராட்சி அதிகாரிகளை பதவி விலக்கு.

3. சேலம் , அஷ்தம்பட்டியில் மதுவிற்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது பூட்ஸ் காலால் மிதித்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்திய காவல்த்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடு.

உள்ளிட்ட கோரிக்கைகள் முழங்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மாநில துனைபொதுசெயலாளர் நெல்லை மாயா, மாநில இளைஞர் அணிச்செயலாளர் தமிழ்வேந்தன் ,மற்றும் மானூர் ராஜா, ஆதித்தமிழன், வீரத்தமிழன், அஜீஸ். ஆட்டோ சீனி, சுந்தர்ராஜு,தன்னூத்து முத்துலட்சுமி , ரெங்கன் உள்பட பேரவை தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்No comments:

Post a Comment