அண்மையச்செய்திகள்

Thursday, 7 January 2016

ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப்பொதுச்செயலாளர் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்த ஆளும் ஜெயலலிதா அம்மையாரின் அரசிற்கு ஆதித்தமிழர் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது -- பொதுச்செயலாளர் ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப்பொதுச்செயலாளர் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்த ஆளும் ஜெயலலிதா அம்மையாரின் அரசிற்கு ஆதித்தமிழர் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது..


சமூகத்தில் அடிநிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட ,மற்றும் தூய்மை பணியாளர்களின் வாழ்வின் தரம் உயர சமரசமின்றி தொடர்ந்து போராடி வரும் ஆதித்தமிழர் பேரவையினர் மீது ஆளும் அதிமுக ஜெயலலிதா அம்மையார் அரசின் தொடரும் அடக்குமுறைகள்.

அடுக்கப்பட்ட முட்டையில் அடிமூட்டையாக இன்று இருக்கும் ஓர் சமூகத்தின் விடியலுக்காய் எந்த வித சமரசமுமின்றி அனைத்து தளங்களிலும் தொடர்ந்து போராடிவரும் அய்யா அதியமான் அவர்களின் தலைமையிலான ஆதித்தமிழர் பேரவையின் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தொடர்ந்து பல அடக்குமுறைகளையும் , நிர்வாகிகள் மீது பொய்வழக்குகள் பதிந்து அவர்களை அச்சுறுத்துவதும் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியில் தொடர்கிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 4.1.16 அன்று தன்னூத்து கிராமத்தில் வாழும் அருந்ததிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும்  அவர்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டை மீட்டு தரக்கோரியும்  ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் நெல்லை மாயா மற்றும் ஆதித்தமிழர் பேரவை இளைஞரணிச்செயலாளர் தோழர் அருந்ததியரசு தலைமையிலும் நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக சென்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாடை கட்டி பிணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் புதைக்கும் போராட்டத்தை நடத்தினர்.சனநாயக போராட்டத்தை தொடர்ந்து தனது காவல்துறையின்  முலம் அடக்குமுறை செய்து ஒடுக்க நினைக்கும் அரசு இங்கேயும் தனது காவல்துறையின் மூலம் போராட்டம் செய்ய வந்த பேரவையினர் மீது தனது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

 இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை சமூக விடுதலை ஒன்றே ஒரே நோக்கம் என்ற உயர்நத லட்சியத்தோடு போராடி வரும் ஆதித்தமிழர் பேரவையின் நீலச்சட்டை பட்டாளத்திற்கு இந்த அடக்குமுறை ஒன்றும் புதிதல்ல ஆதலால் ஜெயலலிதா அம்மையாரின் அரசின் அடக்குமுறையை நேரடியாக எதிர்க்கொண்டு போராட்டத்தை வெற்றியாக நடத்திமுடித்து மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட மக்களின் பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த வீரியமிக்க போராட்டத்தை கண்டு அஞ்சிய ஆளும் ஜெயலலிதா அம்மையாரின் அரசு மறுநாளே பேரவையினரை ஒடுக்கும் விதமாக அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திய துணைப்பொதுச்செயலாளர் தோழர் நெல்லை மாயா மீது சமபந்தமில்லாத ஓர் வழக்கை அவர் மீது அவசர அவசரமாக புணைந்து கைது செய்து தனது காழ்ப்புணர்ச்சியை தீர்த்துள்ளது.

அரசின் இந்த அடக்குமுறையை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிப்பதோடு தோழர் நெல்லை மாயா அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற்று உடனே அவரை விடுதலை செய்யுமாறு ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக அரசை கேட்டுக்கொள்வதோடு  ஒடுக்கப்ட்ட மக்களுக்காக போராடுபவர்களை தனது காவல்துறை மூலம் ஒடுக்க நினைக்கும் அரசின் செயலுக்கு ஆதித்தமிழர் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a Comment