அண்மையச்செய்திகள்

Monday, 4 January 2016

"சபாய் கரம்சாரி அந்தோலன்" அமைப்பின் சார்பில் BHIM-YATRA (பீம் யாத்திரா) என்ற தலைப்பில் அசாம் முதல் தில்லி வரை விழிப்புணர்வு பரப்புரை பயணம் பற்றி ஆதித்தமிழர் பேரவை தலைமை குழு அறிவிப்பு

தலைமைக் குழு அறிவிப்பு.
"”"""""""”"""""""""""""""""""""
அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்.
மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலத்தை அம்பலப்படுத்தியும், ஒழித்துக்கட்டவும்,
"சபாய் கரம்சாரி அந்தோலன்" அமைப்பின் சார்பில்
BHIM-YATRA (பீம் யாத்திரா) என்ற தலைப்பில் அசாம் முதல் தில்லி வரை விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளனர்,

இந்த பயணம் வெற்றிபெற பேரவையின் நிறுவனர் 'அய்யா' அதியமான் வாழ்த்துக் கூறியுள்ளார்கள்,
மேற்கண்ட பயணம் மேலே பதிவிடப்பட்டுள்ள திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் தமிழகத்திற்கு வருகிறார்கள், அவர்கள் வருகின்ற வழித்தடம் தங்கும் இடம் மஞ்சல் வண்ணத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
பயணத்தில் சுமார் 40 பேர் வருவார்கள், எனவே நமது அமைப்பு உள்ள பகுதிகளில் பயணக் குழுவினருக்கு சிறந்த முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும் எனவும், வாய்ப்பிருந்தால் அவர்கள் இரவு தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனவும், தலைமை விரும்புகிறது.
நமது நோக்கமும், பயணக்குழுவின் நோக்கமும் ஒன்றாக இருக்கிறது. எனவே சபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் முயற்சியை வரவேற்பு கொடுத்து ஊக்கப்படுத்துவோம்!
உறுதுணையாய் இருப்போம்!!
_______________
தலைமைக்
குழுவிற்காக
பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment