அண்மையச்செய்திகள்

Wednesday, 6 January 2016

தூய்மை தொழிலாளர்களின் துயர் துடைக்க "தலைவர்" அதியமான் விடுத்த கோரிக்கையை ஏற்று தீவிர நடவடிக்கையில் இறங்கிய தி.மு.க பொருளாளர் தளபதியார் அவர்களுக்கு, ஆதித்தமிழர் பேரவையின் நெஞ்சம் நிறைந்த நன்றி.

தூய்மை தொழிலாளர்களின் துயர் துடைக்க "தலைவர்" அதியமான் விடுத்த கோரிக்கையை ஏற்று தீவிர நடவடிக்கையில் இறங்கிய தி.மு.க பொருளாளர் தளபதியார் அவர்களுக்கு, ஆதித்தமிழர் பேரவையின் நெஞ்சம் நிறைந்த நன்றி.
""""""""""""""""""""""""""""""""""""""
தூய்மைத் தொழிலாளர்களின் துயர் துடைக்க கடந்த 23.12.2015 அன்று சென்னையில் "கேள்வி கேட்கும்" ஆர்ப்பாட்டத்தை தனது தலைமையில் நடத்தினார் தலைவர் அதியமான்.

பின்னர் மறுநாள் 24.12.2015  தி.மு.க பொருளாளர் வணக்கத்துக்குறிய தளபதி அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தூய்மைத் தொழிலாளர்களின் அவலம் குறித்த ஆதித்தமிழர் பேரவையின் விரிவான களஆய்வு அறிக்கையையும், அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் கொடுத்து பேசினார்.

அந்த அறிக்கையை பரிசீலித்த தளபதியார் அன்றைக்கே தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தனது அறிக்கையை பதிவிட்டார், அதோடு மட்டுமல்லாது தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அதை அறிக்கையாக கொடுத்தார்.

அதன் தொடர் நடவடிக்கையாக இன்று 6.1.2016  நான்காவது கட்டமாக "நமக்கு நாமே" பயணத்தை சென்னையில் தொடங்கிய தளபதியார்,  முதல் சந்திப்பாக தூய்மைத் தொழிலாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது மழை, வெள்ள நிவாரணம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், மேலும் அவர்களின் அன்றாட வாழ்கையின் குறைகளையும் தொழில்ரீதியாக அவர்கள் அடையும் வேதனைகளையும் கேட்டறிந்தார். பின்னர் தூய்மை தொழிலாளர்களின் கோரிக்கைகளையும். குறைகளையும் வரும் காலத்தில் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.

உண்மையில் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும். அவர்களின் எண்ணங்களையும் உணர்ந்து அவர்களின் நலனில் என்று அக்கறை கொள்ளும் தலைவர் கலைஞரின் நம்பிக்கை நட்சத்திரமும் வருங்கால தமிழக முதல்வருமான தளபதியாரின் லட்சியம் வெற்றிபெறும்.

அதற்கு அருந்ததியர் மக்கள் உறுதுணையாக இருந்து ஆட்சி மாற்றத்திற்கு உழைப்போம்! அந்த மாற்றமே துப்புரவு தொழிலாளர்களின் அவலத்தை மாற்றும்.
____________________
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை.


No comments:

Post a Comment