அண்மையச்செய்திகள்

Wednesday, 18 November 2015

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்தான்கள். ----- பொதுச்செயலாளர். ஆதித்தமிழர் பேரவை

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்தான்கள். ----- பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை
~~~~~~~~~~~
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்துகாளிப்பட்டி மொட்டபாறை அருந்ததியர் பகுதியில் (17.11.2015) மாலை ஆதித்தமிழர் பேரவை மகளிரணி கிளைத்தலைவர் விமலா அவர்களின் கணவர் வீரமணியை, ஆதிக்க சாதி வெறியன் முத்துகாளிப்பட்டி அதிமுக பஞ்சாயத்து துணைத்தலைவர் நடராஜன் என்ற மணி என்பவன்,
ஏன்டா உன் பொண்டாட்டிக்கு எதுக்குடா சங்கம்! பேரவை!! சக்கிலி நீங்கலெல்லாம் சங்கம் ஆரம்பிச்சு என்னடா பன்னப்போறீங்க உன் பொண்டாட்டியை ஒழுங்கா அடக்கி வச்சிக்கோ இல்லனா! கை கால்களை ஒடச்சி போட்டுடுவேன் எனவும், சக்கிலியனுக உங்களால என்னடா பன்னமுடியும், ஒன்னும் கிழிக்கமுடியாதுடா! எனவும் மிரட்டியுள்ளான்,
அதற்கு வீரமணி எங்களுக்கு தெறியும் அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு! என்று திருப்பி கேட்டதற்கு, அந்த கவுண்டன் அடித்து உதைத்து, பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்ய முற்பட்டுள்ளான், அதை கைகளால் தடுத்தனால் கையில் குத்துப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
அதைப்பார்த்த வீரமணியின் மனைவி எதற்கு தேவையில்லாமல் அடித்கிறீர்கள் என்று கேட்டதற்கு அப்படிதான்! அடிப்பேன் உங்களால என்ன புடுங்கமுடியுமோ புடுங்குங்கள் என்று திமிரோடு பேசிவிட்டு சென்றுள்ளான்.
தகவல் அறிந்த ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் வீரமணியை இராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பேய்! அரசாண்டால் பிணம் தின்னும் சாத்தான்கள் என்பதற்கு ஒப்பாக அம்மையாரின் செயலற்ற ஆட்சியில் நிர்வாகம் ஒழுங்கா! நடக்குதோ இல்லையோ! மக்கள் விரோத கொலை கொள்ளை ஊழல்களை அவரது வாரிசுகளின் மூலம் மிக சிறப்பாகவே முன்னெடுத்து செல்லப்படுகிறது.
ஆதிக்க வெறியோடும் அதிகாரத்திமிரோடும் கண்மண் தெரியாமல் அலையும் இந்த காட்டு மிராண்டுகளுக்கு 2016.ல் பதில் சொல்வோம்!
_____________________
பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை.
No comments:

Post a comment