அண்மையச்செய்திகள்

Tuesday, 24 November 2015

எளிமையின் இலக்கணம் பொன்னம்மாள் மறைவுக்கு ஆதித்தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்.(25.11.2015)

எளிமையின் இலக்கணம் பொன்னம்மாள் மறைவுக்கு
ஆதித்தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்.(25.11.2015)
••••••••••••••••••••••
காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவர் காமராஜர் காலம்தொட்டு ஏழுமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்ற திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.

தமிழக சட்டப் பேரவையின் மூத்த உறுப்பினராகவும், இடைக்கால சபாநாயகராகவும் செயல்பட்டவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தும் அனைத்துத் தரப்பு மக்கள் மனதிலும் இடம்பிடித்தவர்,

நிலக்கோட்டை, மற்றும் சோழவந்தான் தொகுதிகளில் ஏழு முறை அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றதிலிருந்தே அவருக்கு வெகுமக்களிடம் இருந்துவந்த செல்வாக்கை புரிந்துகொள்ள முடிகிறது.

இப்படி அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் எளிமை என எல்லாவகையிலும் முன்னுதாரணமாக வாழ்ந்ததோடு, தமிழக அரசின் விருதை பெற்று பெண் சமூகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

அவரது இழப்பு மிகவும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இவண்..
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
(25.11.2015)எளிமையின் இலக்கணம் பொன்னம்மாள் மறைவுக்கு
ஆதித்தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்.

(25.11.2015)

No comments:

Post a comment