அண்மையச்செய்திகள்

Thursday, 5 November 2015

மூவேந்தர்கள் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரை பறப்பது எந்த? நூலால் பூணூலால்! ----ஆனந்தன் ஆதித்தமிழா பேரவை

மூவேந்தர்கள் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரை பறப்பது எந்த? நூலால் பூணூலால்! ----ஆனந்தன் ஆதித்தமிழா பேரவை
""""""""""""""""""
இந்திய வரலாற்றை பற்றி வரலாற்று ஆய்வர் அறிவர் அம்பேத்கர் அவர்கள் கூறுவது. பூர்வகுடி மக்களான தாய்வழிச் சமூகமான நாகர்களுக்கும் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆடுகளை மேய்த்துக்கொண்டு பிழைப்பு தேடிவந்த தந்தை வழிச்சமூகமான ஆரிய பார்பனர்களுக்கும் நடந்த யுத்தங்க்ளே! இந்தியாவின் வரலாறு என்றார்.
படையெடுத்து வந்த ஆரிய பார்பனர்கள் நாகர் இனத்து பூர்வகுடிகள் மீது தொடர்ச்சியான பண்பாட்டு தாக்குதல் மூலமும் தமக்கு இருந்த சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தால் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த நாகர் இனக்குழுக்களின் வட்டார மொழியோடு சமஸ்கிருத கலப்பை ஏற்படுத்தியன் காரணமாக புதிய மொழிகள் உருவாக்கின
இயற்கையை மட்டுமே வணங்கிவந்த நாகர் இனத்தவரிடம் உருவ வழிபாட்டை திணித்து புனைவுக் கதைகள் பலவற்றை கூறி அதற்கான கடவுள்களை உருவாக்கி, அதோடு நான்கு வர்ணங்களையும் படைத்து, சமஸ்கிருத மொழியை தேவ பாசை என்றும் நாகர்களின் மொழியை நீச பாசை என்றும் வகைப்படுத்தினான்.
இப்படி அவர்களின் வேதத்தை வற்புருத்தி திணித்தபோது எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொடவர்களுக்கு நான்கு வர்ணங்களில் ஒரு பிரிவை ஒதுக்கி அவர்களுக்கு உண்டான வேலை பிரிவுகளை கடமையாக வகுத்து வர்ணத்துக்குள் அடக்கினான், பார்பனனையும் அவர்களின் வேதத்தை ஏற்க மறுத்து எதிர்த்து நின்றவர்களை அவர்ணர்கள் என்று ஜந்தாம் சாதியாக்கி பிரித்து வைத்து பிளவை ஏற்படுத்தினான்.
இன்றைக்கும் இந்த வரலாற்று யுத்தம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் நீட்ச்சியாக ஆரிய திணிப்பை பணிந்து ஏற்றுக்கொண்டவர்கள்தான் பிற்படுத்தப்பட்டவர்கள், இவர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை பிரமானனின் சடங்கு சம்பிரதாதத்தை அப்படியே உள்வாங்கி தங்களை உயர் குடிகளாக கருதி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்றைக்கும் ஆரியத்திணிப்பை ஏற்க மறுத்து எதிர்த்து நிற்பவர்கள் ஐந்தாம் சாதியாக்கப்பட்ட அவர்ணர்கள் ஆரியர்களின் சடங்கு சம்பிரதாயங்களை ஏற்க மறுத்து எதிர்த்தே வாழ்ந்து வருகின்றனர்.
3% சதவித மக்களை கொண்ட ஆரியக்கூட்டம் தனது இனத்திற்கு சேவை செய்ய 97% சதவீத பெருபான்மை சமூகமான நாகர் இனத்தை பிளவுபடுத்தி தனக்கான ஒரு நாட்டையும் போலியான வரலாற்றையும், உருவாக்கி தன் இன மக்களின் மேம்பாட்டிற்க்காகவும் சாதிப்பிளவுகளை கூர்மை படுத்தி சண்டையை மூட்டி தனது இருப்பை தங்கவைத்து கொண்டு, சாதிய படிநிலையில் முதன்மை சாதியான பார்ப்பனர்களே! இந்தியாவின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் பார்பன பூணுலின் மூலமே தீர்மாமிக்கின்றான்.
வளர்ச்சி வீழ்ச்சியை கணக்கிடுவதும், தீர்மானிபபாதும் வெறும் 3% சதவிதமான ஆரியனே. இதை ஏற்றுக்கொள்ளவதற்காக 97% கொண்ட பூர்வகுடி சமூகத்தை, பார்பனர்களுக்கு சேவை செய்யயும் அடிமைகளாக ஏற்றுக்கொள்ளும் மனோநிலைக்கு மூலைகளில் விளங்கை பூட்டினான்.
இந்த அடிமை தனத்தை உடைத்துத்தெரிய முற்படும், போததெல்லாம்! சாம பேத தான தண்டத்தால் ஆரியக் கூட்டம் நாகர் இனத்தை அடக்கி ஆள்கிறது. எனவேதான் புரட்சியாளர் அம்பேத்கர் ஆரிய பார்பான் செய்த சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி, அடிமைக்கு அடிமை என்று சொல்! அவனிடம் புரட்சி வெடிக்கும் என்றார். அதன் வழியே அம்பேத்கரியத்தை ஆயுதமாக்கி ஆதித்தமிழர்களாய் (பூர்வகுடி நாகர்கள்) ஒன்றிணைந்து தலைநிமிர்வோம்.
என்றும் அய்யாவின் வழியில் ஆனந்தன்.

No comments:

Post a comment