அண்மையச்செய்திகள்

Thursday, 5 November 2015

பகுத்தறிவு இதழின் வரிசையில் காட்டாறு இதழ் , ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் காட்டாறு இதழின் ஆசிரியருக்கு நிர்வாக குழுவிற்கும் பாராட்டு அறிக்கை.

 பகுத்தறிவு இதழின் வரிசையில் காட்டாறு இதழ் , ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்  அவர்கள் காட்டாறு இதழின் ஆசிரியருக்கு நிர்வாக குழுவிற்கும் பாராட்டு அறிக்கை.தோழருக்கு ,
காட்டாறு இதழ் பார்த்து மகிழ்ந்தேன்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பகுத்தறிவு மனம் பரப்பும் இதழை கண்டு மனமகிழ்வு கொண்டேன் . தோழர் இராவணன்
பகுத்தறிவு இதழின் வரிசையில் காட்டாறு இதழ் , ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்  அவர்கள் காட்டாறு இதழின் ஆசிரியருக்கு நிர்வாகு குழுவிற்கும் வாழ்த்து அறிக்கை:

அவர்களை ஆசிரியராக கொண்டு திண்டுகல்லிலிருந்து வெளிவரும் காடாறு இதழ் அருமை.

பகுத்தறிவு இதழ்கள் எண்ணிகையில் குறைவாக உள்ள நிலையில் இந்த இதழ் ஒரு மாறுதலை உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை.

தோழர்களின் முயற்சி வெற்றி தரும் என்று கருதுகிறேன். நான் இரு இதழ்களை மட்டுமே பார்த்தேன் இந்துத்துவ சக்திகள் பெருகி வரும் நிலையில் இவ்விதழ் தவிர்க்க முடியாத வரவு.இதை குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்லும் வழிவகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது.ஆதித்தமிழர் பேரவை உரிய ஒத்துழைப்பு தரும்.

தோழர் விஜயராகவன் அவர்கள் இந்த இதழில் பொறுப்பு வகிக்கிறார்,அவருக்கும் மற்ற அணைத்து தோழர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

--இரா அதியமான் No comments:

Post a Comment