அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

மானத்தை அழித்து மதியினை கெடுக்கும் மதுவெறி மதவெறி சாதிவெறியை ஒழிக்க தீபாவளியை புறக்கணித்து.. ச.சு.ஆனந்தன்

மானத்தை அழித்து மதியினை கெடுக்கும் மதுவெறி மதவெறி சாதிவெறியை ஒழிக்க
தீபாவளியை புறக்கணித்து.. ச.சு.ஆனந்தன்
~~~~~~~~~~~~~~
நவம்பர்-1-ல் பிரகடனப்படுத்திய ஆதித்தமிழர்களின் அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கினங்க,
தீபாவளி தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு முன்பு ஆதிதமிழர் பேரவை தோழர்கள் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நலனில் அக்கறையில்லாமல் மதுவின்மூலம் வரும் வருவாயை மட்டுமே எதிர் நோக்கி காத்திருக்கும் அரசின் முகத்தில் கறியை பூச தீபாவளியன்று
"மதுக் கடைக்கு செல்லும் மக்களை தடுப்போம்!
முழு மதுவிலக்கிற்கான முதல் தூண்டுதலை விதைப்போம்!! என்ற முழக்கத்துடன் துண்டறிக்கை வினியோகம் செய்து பரப்புரை மேற்கொண்டதன் விளைவாக
ஒடுக்கப்பட்ட அருந்ததியர் பகுதியில் குறிவைத்து திறக்கப்பட்ட மதுக்கடையை ஒரே நாளில் ஆதித்தமிழர் பேரவை துணைகொண்டு, மக்களின் படைகொண்டு அருந்ததியர் பகுதியை விட்டு அகற்றியுள்ளனர்.
மத்தியில் ஆளும் மதவெறி அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாடுகளின் பெயரால் மதவெறியை தூண்டி சிறுபான்மை மக்களை காவுகொடுக்கும் R.S.S.ன் செயல் திட்டத்தில் ஒன்றான தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சேரி மக்கள் வாழுமிடத்தில் மதுக்கடைகளை திறப்பது. என்ற திட்டத்தை நடைமுறை படித்தியும், படிக்காமல் கூட இருக்கலாம்! யாரும் குடிக்காமல் இருக்கக்கூடாது!! என்ற மாநில அரசின் மக்கள் விரோத கொள்கை திட்டத்தையும் முறியடிக்கும் முயற்சியில்..
புரட்சியாளர் அம்பேத்கர் மொழியிலும் அய்யா அதியமான் வழியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேல்முருகன் நகர் அருந்ததியர் பகுதியில் தொடங்கிய மதுவிற்கு எதிரான இந்த யுத்தம். அந்தப் பகுதியில் இருந்து மதுக்கடையை அகற்றி உள்ளது தமிழகம் முமுவதும் முழு மதுவிலக்கை எட்டும் வரை தொடரும்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேல் முருகன் பகுதி மக்களுடன் மது ஒழிப்பு போராளி அய்யா அதியமான் அவர்கள்
ச.சு.ஆனந்தன்

No comments:

Post a Comment