அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

இன்று திருச்செங்கோடு வேல்முருகன் நகரில் "மதுவெறி" "மதவெறி" "சாதிவெறி" க்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையினர் கொட்டும் மழையில் டாஸ்மாக்கை முற்றுகையிட்டனர்

இன்று திருச்செங்கோடு வேல்முருகன் நகரில் "மதுவெறி" "மதவெறி" "சாதிவெறி" க்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையினர் கொட்டும் மழையில் டாஸ்மாக்கை முற்றுகையிட்டனர்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று தமிழகத்தில் ஆண்களே இல்லாத பல வீடுகளை உருவாக்கியிருக்கும் டாஸ்மாக்கை மூடு என்று அனைவரும் போராடிவரும் நிலையில் .திருச்செங்கோடு (வேலைமுருகன் நகர்) பகுதியில் நேற்று தமிழக அரசு டாஸ்மாக்கை புதிதாக திறந்து வைத்துள்ளது.
மக்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை உடனே மூட வலியுறுத்தி இன்று ஆதித்தமிழர் பேரவை அந்த டாஸ்மாக்கை முற்றுகையிட்டனர்.
ஆதித்தமிழர் பேரவையினர் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்வதை கண்ட காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
டாஸ்மாக்கை மூடும் வரை போராட்டம் தொடரும் என ஆதித்தமிழர் பேரவையும் பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
No comments:

Post a Comment