அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

சாதிவெறிபிடித்த கவுண்டர்சாதி ஆசிரியையின் சாதிவெறியாட்டம் ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது மற்றும் இப்போது போராட்ட களத்தில் 13.11.2015

சாதிவெறிபிடித்த கவுண்டர்சாதி ஆசிரியையின் சாதிவெறியாட்டம்
ஆதித்தமிழர் பேரவை வண்மையாக கண்டிக்கிறது மற்றும் இப்போது போராட்ட களத்தில் 13.11.2015
"""""""""""""""""""
நாமக்கல் ராமாவரம் நாகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் அருந்ததியர் மாணவன் சசிதரனை, பிறசாதி மாணவன் கழித்த மலத்தை அள்ள வைத்து கட்டாயப்படுத்தியுள்ளார் கவுண்டர் சாதியை சேர்ந்த ஆசிரியை விஜயலட்சுமி.
இந்த சாதிவெறி ஆதிக்கத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் போராட்ட களத்தில் உள்ளனர்.
மற்றவன் கழித்த மலத்தை அருந்ததியர் மாணவனை அள்ள வைத்து ரசிக்கும் ஆசிரியரின் சாதிவெறிப் புத்தி, திண்ணியத்தில் வாயில் மலத்தை திணித்த சாதிவெறியர்களின் காட்டுத்தனத்தையும் மிஞ்சிவிட்டது.
இந்த வன்கொடுமைக்கு எதிராக ஆளும் அரசு நடவடிக்கை எடுக்குமா? இல்லை
எப்போதும் போல் ஆதிக்க சாதிகளின் பின்னால் நின்றுகொண்டு வன்கொடுமைகளை ஊக்கப்ப்டுத்துமா?
தீண்டாமை ஒரு பாவச்செயல்!
தீண்ட்டாமை ஒரு பெருங்குற்றம்!!
தீண்டாமை தண்டனைக்குறியது!! என
ஆண்டுக்கு ஒருமுறை உறுதியேற்கும் ஆசிரியரே இப்படி சாதிவெறிப் புத்தியோடு அலைந்தால் படிக்கும் மாணவர்கள் மத்தியில் எந்த அறிவு வளரும்.
தமிழக அரசே! காவல்துறையே!!
=>வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி சாதிவெறி விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடு! உடனே கைதுசெய்!
=>ஆசிரியை பதவியிலிருந்து உடனே! பணிநீக்கம் செய்!
=>ஆதித்தமிழர் பேரவை.
13.11.2015No comments:

Post a comment