அண்மையச்செய்திகள்

Sunday, 15 November 2015

அருந்ததியர் மக்கள் மீது தொடரும் பள்ளர்சாதி வெறியாட்டத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. அய்யா' அதியமான் அறிக்கை 11.11.2015

'அய்யா' அதியமான் அறிக்கை 11.11.2015
"'"''''''''''''''''’'"""''
அருந்ததியர் மக்கள் மீது தொடரும் பள்ளர்சாதி வெறியாட்டத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக
கண்டிக்கின்றது.
""""""""""""""""""""""""""""
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் அதலை அருகில் உள்ள பட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த புதியதமிழகம் கட்சியின் ஆதரவாளர் ராஜா என்பவர். பள்ளர்சாதி வெறியோடு பக்கத்து ஊர் புதூரை சேர்ந்த பள்ளர்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அருந்ததியர் மக்கள் மீது வன்முறை கொலை வெறியாட்டம் நடத்தியுள்ளார். இந்த வன்செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
25 குடுப்பங்களே உள்ள அருந்ததியர் மக்களை பட்டக்குறிச்சி மற்றும் புதூரை சேர்ந்த பள்ளர்கள் கும்பலாக ஒன்று கூடி கொடிய ஆயுதங்களுடன் கொடூரத்தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உட்பட 9 பேர் மண்டை, கை கால்கள் உடைபட்டு தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடெங்கும் நடந்தேறும் ஆதிக்க சாதிவெறியர்களின் சாதிஆதிக்க வெறியாட்டங்களை கண்டித்து, தலித்மக்கள் ஒன்றுசேர்ந்து தொடர் போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கும் சூழலில், அருந்ததியர் மக்கள் மீது பள்ளர்களும் பறையர்களும் நடத்திடும் வன்முறை வெறியாட்டங்கள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி தலித் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றது.
பரமக்குடி துப்பாக்கி சூடு, தாமிரபரணி படுகொலை, கொடியங்குளம் சொத்துக்கள் சூறை, புளியங்குடி கழுத்தறுப்பு, என நடந்தேறிய பள்ளர்கள் மீதான வன்செயல்களுக்கு எதிரான போராட்ட களத்தில் பள்ளர்களுக்கு துணையாக நின்ற அருந்ததியர் மக்கள் மீது பள்ளர்கள் காட்டும் சாதிவெறி போக்கு மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
மத்தியில் ஆளும் மதவாத பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி, சாதிவெறி சதிக்கு வழு சேர்க்கின்ற விதமாக, தலித்துகளில் இருந்து விடுபட்டு பிற்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற, ஒரு சில பள்ளர்சாதி தலைவர்களின் முயற்சியின் காரணமாக பாஜக தலைவர் அமிக்சா பங்கேற்ற மதுரை மாநாட்டின் எதிரொளியாக இது போன்ற சம்பவங்கள் நடந்தேறுகிறதோ! என்ற சந்தேகம் நமக்குள் எழத்தான் செய்கின்றது.
மதவெறியும் சாதிவெறியும் மட்டுப்பட்டு கிடந்த பெரியார் பிறந்த தமிழக மண்ணில் ஆங்காங்கே தலைதூக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் வன்கொடுமை கொலை வெறியாட்டங்களை போல் பள்ளர், பறையர் சாதியினரும் காட்டும் சாதி வெறியாட்டம் சங்பரிவார அமைப்புகளின் சதிக்கு துணை போவதாக அமைந்துவிடும்.
அருந்ததியர் மக்கள் மீது பள்ளர் சாதிவெறியர்கள் நடத்திய சாதிவெறியாட்டத்தை சமூகநீதி பார்வையுள்ள தலித் தலைவர்கள் கண்டிக்காமல்! கண்டும் காணாமல் விடுவது மதவாத சாதிய சக்திகளுக்கு சாதகமாக அமைந்து தலித் ஒற்றுமை சிதைத்து விடும் என்பதே நமது கவலை.
எனவே அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பள்ளர் சாதிவெறியர்களை தனிமைபடுத்தி அவர்களை தண்டணைக்கு உட்படுத்துவதற்கு தலித் இயக்க தலைவர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தலித் ஒற்றுமை வழுப்பட்டு சமூகநீதி கோரிக்கையை வென்றெக்கும் போராட்ட களத்தில் வெற்றி காணமுடியும், என தோழமையுடன் தலித் இயக்க தலைவர்களை கேட்டு கொள்கிறேன்.
அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ராஜா தலைமையிலான பள்ளர்சாதி வெறியர்கள் அனவரையும் உடனே கைது செய்ய வேண்டும் எனவும், அருந்ததியர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதோடு காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி விசாணைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
இவண்.
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
11.11.2015

No comments:

Post a comment