அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

முற்போக்காளர் வட்டத்தின் சார்பாக, ஆதித்தமிழர் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களுக்கு வந்த கடிதம்.

முற்போக்காளர் வட்டத்தின் சார்பாக, ஆதித்தமிழர் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களுக்கு வந்த கடிதம்.

மதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக ஆதித்தமிழர் பேரவை தீபாவளியை புறக்கணித்து பொதுமக்களிடம் மேற்கூறிய தலைப்பின் பாதகத்தை எடுத்து கூறி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தது முறபோக்காளர் வட்டத்தின் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இது ஒவ்வொரு ஆதித்தமிழனுக்கும் கிடைத்த வெற்றி இதனை தலைமை தாங்கிய அய்யா அதியமான் அவர்களுக்கு நன்றிகள்.
முற்போக்காளர்
வட்டத்தின் கருத்து
""""""""""""""*""'''""""""""""

மதிப்புமிக்க அறிவாசான் அய்யா அவர்களுக்கு,
வணக்கம். மதுவெறி-மதவெறி-சாதிவெறிக்கு எதிரான தீபாவளி புறக்கணிப்பை கையிலெடுத்தது மட்டுமல்லாமல் அதை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு தங்களுக்கு என் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவிக்கிறேன். தீபாவளியன்று பேரவையின் தொண்டர்கள் அவர்களின் ஒரு நாள் ஓய்வையும் தவிர்த்து, தலைவரின் ஆணைக்கிணங்க, அனைத்து இடங்களிலும் துண்டறிக்கைகளை விநியோகித்தது கண்டு அவர்களை எப்படி பாராட்டுவது என்றே புரியவில்லை. அந்த சிறப்பான பிரச்சாரப் படங்களைக் காணும்பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அது என்னவோ தெரியவில்லை, பேரவை தொண்டர்களும் எதோ திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதைப் போல அவ்வளவு மகிழ்ச்சியாக,அந்த பிரச்சாரத்தை மேற்கொண்டதைப் போலவே படங்களில் தெரிகின்றது. உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. பேரவையின் அத்துணை தோழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!!!
என்னை மிகவும் பாதித்த இரண்டு படங்களை கீழே இணைத்துள்ளேன். அந்த இரண்டு படங்களில் அந்த தோழர்கள் ஆடம்பரமாக கொடி பிடிக்கவில்லை, ஆடம்பரமாக உடை அணியவில்லை, புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்கவில்லை, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவ்வளவு நேர்மையுடன் செய்துகொண்டிருப்பது என் நெஞ்சத்தை கனமாக்குகிறது..கண்களில் நீரை வரவழைக்கிறது...பேரவை தோழர்கள் அனைவருக்கும் என் இருகரம் கூப்பி வணக்கங்களை தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி
வணக்கங்களுடன்
முற்போக்காளர்No comments:

Post a Comment