அண்மையச்செய்திகள்

Thursday, 19 November 2015

தீபாவளி புறக்கணிப்பு பிரச்சாரம் செய்த ஆதித்தமிழர் பேரவைக்கு டாக்டர் அம்பேத்கர் - பெரியார் பெயரிலான விருது - வே. மதிமாறன் அவர்களின் முகநூல் பதிவு

தீபாவளி புறக்கணிப்பு பிரச்சாரம் செய்த ஆதித்தமிழர் பேரவைக்கு டாக்டர் அம்பேத்கர் - பெரியார் பெயரிலான விருது - வே. மதிமாறன் அவர்களின் முகநூல் பதிவு கீழே:

டாக்டர் அம்பேத்கர் - பெரியார் சொன்னபடி இந்த ஆண்டு, தீபாவளி எதிர்ப்பை ஒரு இயக்கமாக மக்கள் மத்தியில் செய்து காட்டினார்கள் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்.
தீபாவளி பித்துப் பல முற்போக்களார்களையே பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் சூழலில்,
அவர்களுக்கும் பாடம் கற்பிப்பதுபோல் தீபாவளியை புறக்கணிக்க மட்டும் செய்யாமல், ‘கறி விருந்து’ என்றும் இயங்காமல், பெரியார் சொன்ன ‘தீபாவளியை துக்க நாளாக’ அனுஷ்டித்தும் எதிர்த்தும் இயங்கிய ஆதிதமிழர் பேரவை தோழர்களுக்கும் அதன் தலைவர் அதியமான் அவர்களுக்கும் நன்றி.
டாக்டர் அம்பேத்கர் - பெரியார் பெயரில் இணைந்து இதுவரை யாருக்கும் விருது தரப்பட்டதில்லை.
அந்த விருதை பெறுவதற்கு முழத் தகுதியும் கொண்டவர்கள் ஆதிதமிழர் பேரவை தோழர்கள்.
தீபாவளிக்கு எதிரான மனம் கொண்ட அனைத்து பெரியார் - டாக்டர் அம்பேத்கர் தொண்டர்கள் சார்பில் உரிமையோடு டாக்டர் அம்பேத்கர் - பெரியார் பெயரிலான மாபெரும் விருதை மானசீகமாக மிகப் பெருமையுடன் ஆதித் தமிழர் பேரவை தோழர்களுக்கு வழங்குகிறேன்.

No comments:

Post a comment