அண்மையச்செய்திகள்

Thursday, 12 October 2017

ஜெ.என்.யு மாணவர் முத்துகிருஷ்ணன் இல்லத்தில், அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் பேரவையினர்

ஜெ.என்.யு மாணவர் முத்துகிருஷ்ணன் இல்லத்தில், அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் பேரவையினர்

தீபாவளி புறக்கணிப்புக் கருத்தரங்கத்திற்கு அழைப்பு
""""""""""""”""""""""""""""""""”"""
9.25 pm
உயர்கல்வியில் இடம்பெற மறுப்புத் தெரிவித்து தொடர் நெருக்கடியால் தற்கொலைக்கு ஆளான சேலம் சத்திரம் பாரதியார்நகர், பகுதி ஜெ.என்.யு மாணவர் முத்துகிருஷ்ணன் இல்லத்தில், அவரது தந்தை, தாயார், தங்கைகள், ஜெயந்தி (பி.எஸ்.சி நர்சிங்)
சுபா (பி.ஏ தமிழ்) உள்ளிட்டோரை சந்தித்து தீபாவளி அன்று ஈரோட்டில் நடைபெறவுள்ள தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கத்திற்கு அய்யா அதியமான் நேரில் அழைப்புக் கொடுத்தார்.

பயணக்குழு உடன்,
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழன், மேற்கு மாவட்ட செயலாளர் இராதாகிருட்ணன், பூவிழிஅரசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து உடனிருந்தனர்.


No comments:

Post a comment