அண்மையச்செய்திகள்

Tuesday, 17 October 2017

தீபாவளியை புறக்கணித்து *தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம்*

தீபாவளியை புறக்கணித்து *தீபாவளி துக்கநாள் கருத்தரங்கம்* பரப்புரை நடத்த ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழுவில் முடிவு!
"""""""""""""""""""""""""""""""""""""'""""'
மதவெறி, சாதிவெறி, ஆணவப் படுகொலை, கருத்துரிமை பறிப்பு, கல்வி உரிமை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என பார்பனிய பயங்கர வாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்.ன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல் சட்ட மரபுகளை சிதைக்கும் மக்கள் விரோத பா.ச.க வின் மத்திய மோடி அரசின் நயவஞ்சக செயலை அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்ட தீபாவளியை புறக்கணித்து பரப்புரை கருத்தரங்கம் நடத்த ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழுவில் முடிவு செய்துள்ளது.
அண்மையில் கருத்துரிமைக்கு எதிராக கர்நாடகாவில் கெளரி லங்கேஸ், நீட் தேர்வினால் குழுமூர் அனிதா, இந்து முன்னணி கயவர்களால், அரியலூர் சிறுமி நந்தினி, உயர்கல்வி உரிமை மறுப்பினால் சேலம் முத்துக்கிருட்டிணன், அடிப்படை மதவாதத்தால் ஃபாருக், சாதி ஆணவத் திமிரினால், உடுமலை சங்கர், திண்டுக்கல் சிவகுருநாதன், பெரம்பலூர் பார்த்திபன் என நீளும் படுகொலை சம்பவங்களால் நாடு மிகப்பெரிய அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசோ மத்திய அரசின் அடிமை அரசாகவே செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட கொடுஞ் செயல்களுக்கு எதிராக கோபம் கொண்டு கொதித்தெழ வேண்டிய மக்களை இயல்பாக கடத்து போக செய்கின்ற பார்பனிய ஏற்பாடுதான் தீபாவளி, இதைப் புரிந்து கொண்டு தீபாவளி என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த, துணிவு தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது, அதைப் பின்பற்றி இன்று ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது,

அதன் தொடர்ச்சியாக அண்மையில் நடந்தேரிய கொடுமைகளுக்கு தீர்வுக்கோரி பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியும் , அவர்களின் குடும்பத்தாரையும் பேரவை முன்னெடுக்கின்ற தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று தலைவர் அதியமான் அழைப்பு கொடுத்தார்,அவர்களும் கலந்து கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்

மேற்கண்ட கருத்தரங்கில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி ,மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் தோழர் பாலபாரதி அவர்களும் ,ஆதித்தமிழர் கட்சி தலைவர் தோழர் வெண்மணி , திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர் சண்முகம் ,தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் தோழர் குமரகுருபரன் ,உள்ளிட்ட தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் பங்கேற்கின்றனர்

தீபாவளி புறக்கணிப்பு கருதரங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கி இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சாதிகளும் ,பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தோழமையுடன் அழைப்பு விடுக்கிறதுNo comments:

Post a comment