அண்மையச்செய்திகள்

Wednesday 11 October 2017

மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் அய்யா அதியமான் மற்றும் பேரவை தோழர்கள் மீது போடப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று இரத்து செய்யப்பட்டது...

மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் அய்யா அதியமான் மற்றும் பேரவை தோழர்கள்  மீது போடப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று இரத்து செய்யப்பட்டது...

மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நிகழ்வு அன்று எங்கள் தலைமுறையின் தலைநிமிர்வு
அய்யா அதியமான் அவர்கள் மீதும் என் மீதும் பேரவை தோழர்கள் 20 பேர் மீதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் ஆகத்து 20 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கை இன்று முழுமையாக இரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்குகள் பதிவு செய்தால்
ஆதித்தமிழர் பேரவையின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்ற குருகிய புத்தியிலும் அய்யா அதியமான் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததால் அவருக்கு பெரும் அலட்சலையும் பல ஆயிரம் ரூபாய் செலவுகளையும் ஏற்படுத்தலாம் அவரை கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய வைத்து விடலாம் என்ற அற்பத்தனமான எண்ணத்தில் செயல்பட்டவர்களுக்கும் பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறைக்கும் ஆதித்தமிழர் பேரவை பலமான ஆலமரம் என்பதையும் அய்யா அதியமான் அவர்கள் ஆலமரத்தை தாங்கி நிற்கும் ஆழமான ஆணி வேர் என்பதையும் புரிய வைத்திருக்கிறோம்

ஆலமரத்தை அனுவும் அசைக்க முடியாது என்பதையும்
எங்கள் தலைவர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் சிறு துரும்பை கூட புடுங்க முடியாது என்பதையும் வழக்கு தொடுத்தவர்களுக்கு இன்று புரிய வைத்திருக்கிறோம்

வழக்கு தொடுத்த அன்பர்களே
பல ஆயிரம் செலவு செய்யவில்லை வெறும் 2,500 ரூபாய் செலவில் வழக்கு முழுமையாக இரத்து செய்யப்பட்டது
ஆண்டுகணக்கில் அய்யா அவர்களை அலைய வைத்து விடலாம் என்று நினைத்தவர்களே
இரண்டு மணி நேத்தில் வழக்கு இரத்து செய்யப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம்

இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டுமென்றால் அய்யா அதியமான் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்பதால் இந்த வழக்கிற்காக அய்யா அவர்களை கோவையிலிருந்து மதுரைக்கு வரவழைத்து சிரமத்தை ஏற்படுத்தாமல் நேற்று தேனி செயற்குழுவை முடித்து விட்டு இன்று கோவை செல்லும் வழியில் அய்யா அவர்களை உயர்நீதிமன்றத்திற்கு வரவழைத்து எந்த வகையிலும் சிரமத்தை ஏற்படுத்தாமல் இந்த வழக்கை இரத்து செய்ய திறம்பட செயல்பட்ட மதுரை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய ரஜினி அவர்களுக்கும் விருதுநகர் மதுரை மாவட்ட தோழர்களுக்கும் அரைகோடி அருந்ததியர்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சமர்பிக்கிறோம்

No comments:

Post a Comment