அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

கிளை அமைக்கும் பணி மன நிறைவை தந்தது. -- பொதுசெயலாளர்

கிளை அமைக்கும் பணி
மன நிறைவை தந்தது.
""""""""""""""'''''''""""""""""""''''''
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகில் (காமநாயக்கன் பாளையம்) புளியம்பட்டி மதுரைவீரன் தெற்குப் பகுதியில்...
அமைப்பு தொடங்குவது குறித்து ககந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 25 பெண்கள் உள்பட 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மத்தியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கருத்துரை ஆற்றினேன்.
கூட்ட ஏற்பாட்டினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுணன் அவர்கள் செய்திருந்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சோழன், கொ.ப.செ. வீரசக்திவேல், திருப்பூர் மாநகர செயலாளர், தளபதி.குணசேகரன், தாராபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராசேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் இராமகிருட்டிணன் ஆகியோர் பங்கேற்றனர்.
புளியம்பட்டி அண்ணாநகர் & புளியம்படி தெற்கு வீதி என இரண்டு பகுதிகளாக உள்ள இப்பகுதியில் மொத்தம் 300 வீடுகள் என 500 குடும்பங்கள் இருக்கின்றனர், இங்கு ஒரு பழைய சமூகக்கூடம், பொதுக்கழிப்பிடம், மயானம் என்பன போன்ற வசதிகள் இருந்தாலும், இன்னும் பல உரிமைகளுக்காக போராட வேண்டி உள்ளது, என்றே ஆதுத்தமிழர் பேரவையை தொடங்குவதாக மக்கள் கூறினர். குறிப்பாக பெண்களின் ஆர்வம் மிகையாக தென்பட்டது.
இது போக... இங்கு ஒரு மதுரைவிரன் கோவிலும் உள்ளது.
பொதுசெயலாளர்.
22.10.2017
No comments:

Post a comment