அண்மையச்செய்திகள்

Thursday 12 October 2017

பெரம்பலூர் பார்தீபன் இல்லத்தில் அய்யா அதியமான் தலைமையில் பேரவையினர்

இன்று மாலை 4 மணி பெரம்பலூர் பார்தீபன் இல்லத்தில் அய்யா அதியமான் தலைமையில் பேரவையினர்
.................
இரண்டாம் நாள் பயணம்.
12.10.2017 திட்டக்குடி
"""""""""""""""""""""""""""""""
காலை.11.30
**************
தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கத்திற்கு அழைப்பு விடுத்து ஆதிக்க தலித்துகளால் அடித்து படுகொலை செய்யப்பட்ட தருமக்குடிக்காடு சிவக்குமார் இல்லத்திற்கு அய்யா அதியமான் அவர்கள் நேரில் சென்று சிவக்குமாரின் துணைவியாரை அழைத்தார்,
பயணக்குழுவுடன்
செங்கைகுயிலி, எழில்புத்தன், திருவீரன், சேலம் செல்வக்குமார், மற்றும் திட்டக்குடி ராஜா உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 12.15
"""""""""""" ”""""""""
குழுமூர் அனிதா இல்லத்திற்கு சென்று அனிதாவின் தந்தை மற்றும் அண்ணன் வீரமணியை  கருத்தரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
பிற்பகல். 1.15
"""""""""""""""""""""
அரியலூர் (சிறுகடம்பூர்) நந்தினி இல்லத்திற்கு அய்யா அதியமான் நேரில் சென்று அனிதாவின், தாய், அக்கா, தம்பியை கூட்டதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
மாலை 4.00 மணி
""""""""""""""""""""""""""
பெரம்பலூர் ஆலாம்பாடி சாலை, புதியகாலனி 1 வது வார்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பார்த்திபன், அவர்கள் ஒச்சம்மாள் என்ற கள்ளர் சாதிப்பெண்ணை காதலித்தார் என்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய வழக்கில் உள்ள கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்படி பார்த்திபனின் தந்தை தாயாரை நேரில் சந்தித்து தீபாவளி அன்று நடைபெறவுள்ள தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கில் பங்கேற்க வேண்டும் என்று அய்யா அதியமான் அழைப்பு கொடுத்தார்.






No comments:

Post a Comment