அண்மையச்செய்திகள்

Tuesday, 31 October 2017

வன்கொடுமை திருத்த சட்டம்-2015, கையால் மலமள்ளும் தடைச்சட்டம் கந்துவட்டி தடைச்சட்டம், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில்..கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,28.10.2017 மாலை 4.30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில்..
அய்யா அதியமான் ஆணைக்கு இணங்க..

வன்கொடுமை திருத்த சட்டம்-2015,
கையால் மலமள்ளும் தடைச்சட்டம்
கந்துவட்டி தடைச்சட்டம்,
உள்ளிட்ட மக்கள் நலனுக்கான சட்டங்களை முழுமையாக நடைமுறைப் படுத்தத் தவறும்..

எடப்பாடி பழனிச்சாமி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். சோழன், துரையரசன், கனகசபை, வீரக்குமார், வீரசக்திவேல், குணசேகரன், ஈரோடு அழகுமணி, சித்திரா, வீரக்குமார், இளைஞரணி பிரபாகரன், இராமகிருட்டிணன்,

சசி,மனித உரிமை அமைப்பு குருசாமி, தி.வி.க பொறுப்பாளர், முகிலரசன், தி.மு.க சிடிசி.வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்ட இறுதியில் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார்.

50 பெண்கள் உட்பட 90 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பட்டத்தை சிறப்படைய செய்தனர்.

திருப்பூர் வடக்கு மாவட்டம்.No comments:

Post a comment