அண்மையச்செய்திகள்

Friday, 13 October 2017

பெருகிவரும் டெங்கு மரணங்கள் தடுத்து நிறுத்தக்கோரி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டம்

பெருகிவரும் டெங்கு மரணங்கள் தடுத்து நிறுத்தக்கோரி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டம்
"''''""""""""""""""""""""""""""""""""
நாள்.. 13.10.2017,
காலை. 11.00 மணி
இடம்.. ஈரோடு.

அய்யாவின் கண்டன உரையை காண இங்கு சொடுக்கவும்

தமிழக அரசே!

தமிழத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் பத்து பேர் என டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவுக்கு பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் வருகிறது, தமிழக அரசு டெங்கு காயச்சலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காதது மட்டுமின்றி டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டி உண்மையை மூடிமறைத்துவருகிறது.

தமிழக அரசின் இந்தப்போக்கைக் கண்டித்தும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குவுக்கும் சிகிக்சை அளிக்க வலியுறுத்தியும், இன்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடைபெறுகிறது,

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மாவட்டம் வாரியாக தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து பேரவை முன்னெடுக்க இருக்கிறது.

முந்தைய ஆண்டுகளைவிட தற்போது டெங்கு மரணம் அதிகமாக இருப்பதற்கு "உள்ளாட்சி அமைப்புகள்" நிர்வாகம் இல்லாமல் முடக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும். சுகாதார நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் சரியாக செயல்படுத்தமுடியும்.
தனியார் மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சைபெற பணவசதி இல்லாத காரணத்தினால் பலபேர் உயயிரிழக்க நேரிடுகிறது. எனவே டெங்கு சிகிச்சையை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் காலம் தாழ்த்துவது கண்டனத்திற்குரியதாகும்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது, மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாஜகவின் முன்னணித் தலைவர்கள் மாநில அரசை மட்டும் குறைகூறிப் பேசிவருகின்றனர். டெங்குவிலும் அரசியல் ஆதாயம் தேடும் அவர்களது செயல் கண்டிக்கத்தக்கது,

1) எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள முன்வரவேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

2) மாநில அரசின் மீது பலியை சுமத்திவிட்டு அரசியல் ஆதாயம் தேடாமல் மத்தியஅரசு இதில் முழு கவனம் செலுத்தி, மருத்துவ உள்ளாட்சி கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துகிறது.

3) டெங்குவை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என தமிழக அரசை இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துகிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்,
ஆதித்தமிழர் பேரவை.
13.10.2017.

No comments:

Post a comment