அண்மையச்செய்திகள்

Thursday, 26 October 2017

நீட் தேர்வை இரத்து செய்ய மதுரையில் பொதுக்கூட்டம்

நீட் தேர்வை இரத்து செய்ய மதுரையில் பொதுக்கூட்டம்தமிழக மக்களின் - மாணவர்களின் சமூக நீதி உரிமையைப் பறிக்கும் "நீட்டை " இரத்து செய்ய, கல்வியை தமிழ் மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழ்நாடு சட்டன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி .....

26-10-2017 மதுரை அண்ணா நகரில்
#நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,
நமது *ஆதித்தமிழர் பேரவை* சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர் கபீர் நகர் கார்த்திக் அவர்களும் நம் உறவு *திராவிடர் விடுதலைக் கழகம்* தோழர் ம.பா.மணிகண்டன் ஆகியோர்களும் பங்கேற்று கருத்துரையாற்றினார்.
உடன் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பா.ஆதவன்.
மா.பு. நிதிச்செயலாளர் தோழர் மணிகண்டன். மற்றும் மா.பு.துணைத்தலைவர் தோழர் பெரு.தலித்ராஜா ஆகியோர்களும் பங்கேற்றார்கள்.

By.
புறநகர் மாவட்ட செய்திப்பிரிவு.
*ஆதித்தமிழர் பேரவை*
மதுரை.
No comments:

Post a comment