அண்மையச்செய்திகள்

Tuesday, 31 October 2017

#stand_with_mugilan #release_mugilan கரூரில் இன்று மனு அளிக்கப்பட்டது:

#stand_with_mugilan
#release_mugilan
கரூரில் இன்று மனு அளிக்கப்பட்டது:
1. சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலன் அவர்களை கடந்த 18-09-2017 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆழ்வார் திருநகரி சாலையில் வைத்து இலங்கையில் வெள்ளை வேன் கடத்தல் போன்று வாகனத்தில் கடத்தி கைது செய்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
2. முகிலன் அவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும்,
3. கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள 132 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரியும்,
4. பல்வேறு குறைபாடுகளுடன் உள்ள கூடங்குளம் அணுவுலைகளை நிரந்தரமாக மூடவும், அங்கு கூடுதலாக உருவாக்க திட்டமிட்டுள்ள அணு உலைத் திட்டங்களை கைவிடவும் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
5. இயற்கை வளங்களை பாதுகாக்க போராடிய முகிலன் அவர்களை விடுதலை செய்யக்கோரியுமான மனு இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது...

பங்கு பெற்ற அமைப்புகள்:
1. தோழர் முகிலன் விடுதலைக்கான ஆதரவு இயக்கம்
2. நம்மாழ்வார் மன்றம்
3. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்
4. தந்தை பெரியார் திராவிட கழகம்
5. ஆதித் தமிழர் பேரவை
6.சாமானிய மக்கள் நலக் கட்சி
7.புரட்சி பாரதம் கட்சி

No comments:

Post a comment