அண்மையச்செய்திகள்

Tuesday 17 October 2017

ஆதித்தமிழர் பேரவை கம்பம் பகுதி மாணவரணி சார்பாக இன்று காலை ஆதித்தமிழன் அறிவாலயம் நூலகத்தில் வைத்து தீபாவளி புறக்கணிப்புக் குறித்து சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை கம்பம் பகுதி மாணவரணி சார்பாக இன்று காலை ஆதித்தமிழன் அறிவாலயம் நூலகத்தில் வைத்து தீபாவளி புறக்கணிப்புக் குறித்து சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
***********************
1- ஒரே நாடு, ஒரே மொழி ஒற்றை கலாச்சாரம் என ஆர் எஸ் எஸ் இன் திட்டத்தை நடைமுறை படுத்தும் மத்திய மாநில அரசை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை தீபாவளி புறக்கணிப்பு செய்வோம்
2- சாதிவெறி , மதவெறி, ஆதிக்க தலித் வெறி , அடிப்படை மதவெறி ,ஆணவப்படுகொலைகள் ,பெண்கள் மீதான வன்முறைகள் , கருத்துரிமை பறிப்பு , கல்வி உரிமை சிதைவு , மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தை வேரறுக்க தீபாவளியை புறக்கணிப்போம்
3- கம்பம் நகராட்சி துப்பரவு பணியாளர்களை காலம் நேரம் கருதாமல் அதிக பணிச்சுமைக்கு ஆளாக்கி அவல நிலைக்கு தள்ளும் ஆணையாளரை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது
4- ஆறு ஆண்டுகளாக தனியார் துப்பரவு பணியாளர்களாக பணி செய்பவர்களை நகர வளர்ச்சிக்கேற்ப உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்யவும் நகராட்சி நிர்வாகத்தை செயற்குழு வலியுறுத்துகிறது
5- ஆறு ஆண்டுகளாக தனியார் துப்பரவு பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் உள்ள வைப்பு நிதி ( PF ) தொகையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக செயற்குழு வலியுறுத்துகிறது
6- மக்களை காப்பாற்றும் மருத்துவமனையே ,நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே ,மருத்துவமனை கழிவுகள் , அம்மா உணவக கழிவுகளை 30வது வார்டு அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி உயிர் பறிக்கும் டெங்கு ,மலேரியா போன்ற தோற்று நோய்களை பரப்பும் அவளை நிலையை செயற்குழு கண்டிக்கிறது
தலைமை - மோ இளவேந்தன் B.Sc (கம்பம் நகர மாணவரணிச்செயலாளர்)
முன்னிலை - நெ ராம்செழியன் B.A( நகர மாணவரணி செய்தித்தொடர்பாளர்)
வரவேற்புரை - வீர அம்பேதமோடி M.A (நகர மாணவரணி நிதிச்செயலாளர்)
ஒருங்கிணைப்பு - பா அதியர்மணி (மாவட்ட இளைஞரணிச்செயலாளர்)
நன்றியுரை - கோட்டை குருமுருகன் (மாவட்ட அமைப்புச்செயலாளர்)
********
என்றும் மக்கள் பணியில் ஆதித்தமிழர் பேரவை மாணவரணி கம்பம்

No comments:

Post a Comment