அண்மையச்செய்திகள்

Wednesday, 11 October 2017

சமூக நீதி பயணத்தில் உயிர் நீத்த போராளிகளின் வீட்டிற்கு சென்று அய்யா அதியமான் அவர்கள் போராளிகளின் குடும்பத்துடன் சந்திப்புபார்பனிய, சாதி ஆதிக்க பயங்கரவாதத்தாலும், ஆணாதிக்க திமிரினாலும் படுகொலைகளுக்கு உள்ளான, போராளிகள் மற்றும் சமூகநீதி மீட்புப் போரில் தன்னுயிரை ஈந்த போராளிகள் இல்லங்கள் நோக்கி அய்யா அதியமான் தலைமையில் இரண்டு நாட்கள் சந்திப்பு பயணம்! தொடங்கியது.

11.10.2017
காலை.11.30 மணி
"""""""""""""""""""""""""""
சமூகநீதிப் போராளிகள்
நெருப்புத் தமிழன் நீலவேந்தன் இல்லத்தில் அவரது தாயார் தந்தையார், மற்றும் தங்கை ஆகியோரை சந்தித்தார்.

பிற்பகல் 12.30 மணி
"""""""""""""""""""""""""""""""
மாவீரன் மகேசுவரன் இல்லத்தில் அவரது தாயார் மற்றும் சகோதரன் ஆகியோரை சந்தித்தித்தார்.

அடுத்து உடுமலை சங்கர் இல்லம் நோக்கி புறப்படுகிறார்..

உடன் பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் ஆனந்தன், இணையதள பொறுப்பாளர், தேன்மொழி, சட்டக் கல்லூரி மாணவி இந்திரா, மற்றும் புகைப்பட கலைஞர் ரவி ஆகியோர் பயணத்தில் உள்ளனர், சந்திப்பு நிகழ்வின் போது திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள், சோழன் பரமேசுவரன், சின்னசாமி, துரையரசன், வீரக்குமார் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் முன் ஏற்பாடுகளை செய்து உடனிருந்தனர்.
No comments:

Post a comment