அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவையில் தோழர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர்

ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவையில் தோழர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர்
******************************
இழிவை ஒழிப்போம்!!
உழைப்புச்
சுரண்டலைத் தடுப்போம்!!!
"""""""""""""""""""""""""""""""""""""""
22-10-2017 (இன்று) வேலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் தோழர் இரா.இராசகோபால் (ஆதபே), ஒருங்கிணைப்பில் காட்பாடி ஒன்றியம் DBC தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்,
#ஆதித்தமிழர் பேரவை யில் மூலம் இயங்கிவரும் #ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை யின் சிறந்த செயல்பாட்டின் விளக்கங்களையும் தொழிலாளர்களின் நலன்மீது பேரவை கொண்ட அனுசரணையும் அக்கறையும் விளக்கமாகக் கூறி கேட்டறிந்து ஆதொபே மாநிலத்தலைவர் #தி.க.பாண்டியன் அவர்கள் வழிகாட்டுதலின் படி இன்று பிரம்மபுரம் தங்கமணி செந்தில்குமார் தலைமையில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்டோர்கள் தங்களை #ஆதொபே யில் இணைத்துக்கொண்டனர்.

தீர்மானம் :
""""""""""""""""""""
=> காட்பாடி ஒன்றியத்திலுள்ள 21 பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும்.

=> ஊதிய உயர்வு கோரி அரசை வலியுறுத்துவது எனவும்.

=> கொசு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு உபகரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டுமென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடன் :
கொத்தமங்கலம் கோ.குணசேகரன் /
சேனூர் நா.அர்ஜீனன் /
பிரம்மபுரம் சீ.அரசு/
பிரம்மபுரம் ப.காளிமுத்து /
பிரம்மபுரம் ர.அய்யப்பன். ஆகியோர்களும் பங்கேற்றார்கள்.

தகவலுக்காக :
பெரு.தலித்ராஜா.
#ஆதித்தமிழர் #பேரவைNo comments:

Post a comment