அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

கால்வாய் பாலம் கட்டி தர திண்டுக்கல் ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையினர் மனு

கால்வாய் பாலம் கட்டி தர திண்டுக்கல் ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையினர் மனு
*********
அனுப்புநர் :
இரா.சண்முகம்.
மேற்கு மாவட்டத் தலைவர். ஆதித்தமிழர் பேரவை. மற்றும் அருந்ததியர் பொது மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம்.

பெறுநர் : உயர்திரு, ஆட்சித்தலைவர் அவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம்.
ஐயா, வணக்கம்
பொருள் : ஒடைக்கால்வாயை கடந்து செல்வதற்கு பாலம் கட்டித்தர வேண்டுதல் - தொடர்பாக,
-------------------
வேடசந்தூர் ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி, தொப்பாநாயக்கனூர் அருந்ததியர் காலனியில் 30 க்கும் மேற்ப்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலத்தை வாங்கி காலனி வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள்.
எங்களது குடியிருப்பானது ஓடைக்கால்வாய் ஒட்டி அமைந்துள்ளது இந்த ஓடைக்கால்வாயை கடந்துதான் எங்களது காலனிக்குச் செல்ல முடியும்.காலனி வீடுகள் கட்டிக் கொடுக்கும் போதே நடைபாதை அளவில் சிறிய பாலம் கட்டிக்கொடுத்தார்கள்.அந்த நடைபாதை பாலத்தில் இரு சக்கர மோட்டார் வாகனம் கூட செல்ல முடியாது.அந்த நடைபாதை பாலமும் கூட கடந்த மாதம் பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்ப்பட்டு பக்கவாட்டு சுவர் இடிந்தும் கீழே விழும் அபாய சூழலில் உள்ளது.தற்போது இந்தப்பாலத்தில் பள்ளி மாணவர்களும், முதியோர்களும் கடந்து செல்லவே அச்சமாக உள்ளது.இதனால் நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றோம்.
ஆதலால், அபாயநிலையில் இருக்கும் பாலத்தை சீர்படுத்த வேண்டுமெனவும்,குறைந்தபட்சம் நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவில் புதிய பாலம் கட்டித்தத்தர வேண்டும் என தாங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
இரா.சண்முகம்.
(9443711260)
ஆதித்தமிழர் பேரவை.மேற்கு மாவட்டத் தலைவர்.
திண்டுக்கல்.
உடன் தொப்பாநாயக்கனுர் அய்யா முத்துவீரன்.
By,
பெரு.தலித்ராஜா.
ஆதித்தமிழர் பேரவை.No comments:

Post a Comment