அண்மையச்செய்திகள்

Wednesday 25 October 2017

தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்க நிகழ்வு செய்தித் துளிகள்

தீபாவளி புறக்கணிப்பு
கருத்தரங்க நிகழ்வு
செய்தித் துளிகள்
"""""""''''''''''''''''''''''''""'''''''''''''''''’"
 அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும் 

தோழர் கொளத்தூர் மணி அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்

18.10.2017
மாலை 4.30 மணிக்கு..
தலைவர் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வீரவணக்கம் மற்றும் தீபாவளி புறக்கணிப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மாலை.5.00 மணிக்கு கருந்தரங்க நிகழ்விடமான மாநகராட்சி மண்டபத்திற்கு தலைவர் செல்லுகையில்.. குறித்த நேரத்திற்கு வருகை தந்த தோழர் கொளத்தூர் மணி அவர்களையும், தோழர் வெண்மணி அவர்களையும், தலைவர் அவர்கள் வாஞ்சையோடு வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றார்.
நீலச்சட்டை தொண்டர்களின் ஆரவார வாழ்த்து முழக்கங்களுடன் தலைவர் மேடைக்கு செல்ல, திராவிடர் கழக பொறுப்பாளரும் தந்தை பெரியார் தி.க பொறுப்பாளரும் கூடுதலாக மேடையை அலங்கரித்தனர்.
அரங்கம் நிறைந்து வழிந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் தலைவர் தலைமையில் கருத்தரங்கம் 5.15 க்கு தொடங்கியது. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் வீரகோபால், வடக்கு மாவட்ட செயலாளர், ஆறுமுகம், மாநகர் மாவட்ட செயலாளர் வீரக்குமார் முன்னிலை பொறுப்பேற்று சிறப்பிக்க,
தலைவர்களையும், மக்களையும் வரவேற்று மகிழ்ந்தார், தலைமை நிலைய செயலாளார் வழக்கறிஞர் ஆனந்தன். தொடக்கவுரை ஆற்றிய பொதுச்செயலாளர் நாகராசன் அரங்கத்தை நெறிபடுத்தினார்.
பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர், தோழர், குமரகுருபரன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தோழர், சண்முகம், ஆதித்தமிழர் பேரவை மாநில நிதிச்செயலாளர் அண்ணன் பெருமாவளவன் ஆதித்தமிழர் கட்சி தலைவர் தோழர் வெண்மணி, உள்ளிட்ட தலைவர்கள் தீபாவளி புறக்கணிப்பு குறித்து கருத்துச் செறிவுமிக்க உரையாற்றினர்,
இரவு 6.30 மணியளவில் அரங்கத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேநாள் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் பாலபாரதி அவர்களை தலைவர் வரவேற்று மேடையில் அழைத்துவந்தார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி உரையாற்றினார்.
இரவு 7.30
"""""""""""""""
பார்பனிய சாதிய பயங்கரவாத்தால் பலியான குழுமூர் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் அவர்கள், தனது தங்கைக்கு நேர்ந்த அநீதியை அரங்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து...
உயர் கல்வி உரிமை மறுப்பினால் பலியான ஜே.என்.யு ஆராய்ச்சி மாணவர் சேலம் முத்துகிருட்டிணனின் சகோதரி கலைவாணியும், தந்தையார் ஜீவாநந்தம் அவர்களும்,
இந்து முன்னணி கயவர்களால் சிதைக்கப்பட்ட அரியலூர் சிறுமி நந்தினியின் சகோதரி சிவரஞ்சனியும், தாயார் ராஜாக்கிளி அவர்களும்,
ஆதிக்க தலித்துகளால் படுகொலை செய்யப்பட்ட திட்டக்குடி தருமக்குடிகாடு சிவக்குமாரின் மனைவி சுதா அவர்களும்,
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சமூகநீதிப் போராளி பேரவையின் மேநாள் மாநில மகளிர்அணி தலைவர் திருச்சி இராணியின் புதல்வன் குகன் அவர்களும்,
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சமூகநீதிப் போராளி பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வாவிபாளையம் மகேசுவரனின் தாயார் பட்டம்மாள் அவர்களும்,
தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள.. அடிப்படை மதவாதத்தால் படுகொலையான தோழர் கோவை ஃபாருக் அவர்களின் தந்தையார் அமீது அவர்களும், நிகழ்வில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து தோழர் பாலபாரதி அவர்கள் பார்பனிய பண்பாட்டுத் திணிப்பை எதிர்த்து உரையாற்றினார்.
நிகழ்வின் இடையில் கருத்தரங்கில் பங்கேற்ற தோழமை இயக்க தலைவர்களுக்கும், பாதிப்புக்கு உள்ளாகிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தலைவர் அவர்கள் பேரவை வெளியீட்ட நூல்களின் தொகுப்பையும், தீபாவளி புறக்கணிப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கி மரியாதை செய்தார்.
இரவு 8.30 மணியளவில் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் தீபாவளி புறக்கணிப்பு குறித்தும், பார்ப்பனிய பண்பாட்டுத் திணிப்பு குறித்தும் விரிவாக நிறைவுப் பேருரை ஆற்றினார்.
ஈரோடு மாவட்ட நிதிச்செயலாளர் தோழர் இராதா அவர்கள் நன்றி கூறி கூட்டம் இரவு 9.25 க்கு நிறைவடைந்து.
மொத்தத்தில் தீபாவளி அன்று உணர்வுடனும், எழுச்சியுடனும் திரளாக பங்கேற்ற பேரவை தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும், கிடைத்த பார்ப்பனிய எதிர்ப்பு விருந்து என்றே சொல்லாம்.
___________________
ஆதித்தமிழர் பேரவை
பொதுச்செயலாளர்.
19.10.2017
மாலை.7.30 பதிவு.



















No comments:

Post a Comment