அண்மையச்செய்திகள்

Tuesday 17 October 2017

பாதையில் செல்லும் கழிவுநீரை அகற்ற வேண்டியும் , கழிவு நீரை பாதையில் விடும் குடியிருப்பு உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டியும் ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாதையில் செல்லும் கழிவுநீரை அகற்ற வேண்டியும் ,
கழிவு நீரை பாதையில் விடும் குடியிருப்பு உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டியும் ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு
*************************************.
அனுப்புனர் :
பெரு.தலித்ராஜா.
ஆதித்தமிழர் பேரவை. மதுரை மாவட்டம்.

பெறுநர் :
உயர்திரு.ஆட்சித்தலைவர் அவர்கள்.
மதுரை மாவட்டம்.
அய்யா, வணக்கம்.
பொருள் : பாதையில் செல்லும் கழிவுநீரை அகற்ற வேண்டுதல் தொடர்பாகவும்,
கழிவு நீரை பாதையில் விடும் குடியிருப்பு உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டுதல் தொடர்பாகவும்.
~~~~~~~~~~~~~~~~~~
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். திருப்பரங்குன்றம் ஒன்றியம், விரகனூர் ஊராட்சிக்குட்ட்ப்பட்ட நாட்டாண்மை தோப்பு தெருவில் அருந்ததியர் மக்களும் பல்வேறு தரப்பு மக்களும் வசித்து வருகின்றோம்.விரகனூர் உயர் நிலைப்பள்ளி பின்புறத்திலுள்ள சிமெண்ட் சாலையில் கடந்த ஒருமாதத்திற்க்கு மேலாக தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்தாமல் இருந்து வருகின்றனர். உயர்நிலைப்பள்ள்ளி பின்புறத்திலுள்ள இச்சிமெண்ட் சாலையில் பள்ளி மாணவர்ஙகளும்,அப்பகுதி பொதுமக்களும் பயன்படுத்தி வந்த சாலையில் தற்போது கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பாதையினை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றோம்.இந்த கழிவு நீர் தேக்கத்தால் கண்டிப்பாக எங்கள் பகுதியில் நோய பரவும் சூழல் உள்ளது.
கழிவுநீரை சாலையில் விடும் நபர்கள் மீது அரசு அறிவித்துள்ளது போல் அபராதத்தொகை வசூலிக்க வேண்டும்.
ஆதலால், எங்கள் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தி சிமெண்ட் சாலையினை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும். சாலையில் கழிவு நீரை விடும் சம்மந்தப்பட்ட நபர் மீது அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம்.
பெறுதல் :
உயர்திரு, ஊராட்சி உதவியாளர் அவர்கள். விரகனூர் ஊராட்சி.
மதுரை.
இப்படிக்கு,
பெரு.தலித்ராஜா.
ஆதித்தமிழர் பேரவை. மதுரை மாவட்டம்.
16-10-2017


No comments:

Post a Comment