அண்மையச்செய்திகள்

Wednesday, 25 October 2017

நெல்லையில் தீபாவளி புறக்கணிப்பு சபதமேற்று பெரியார் சிலைக்கு மரியாதையை செலுத்திய ஆதித்தமிழர் பேரவையினர்

நெல்லையில் தீபாவளி புறக்கணிப்பு சபதமேற்று பெரியார் சிலைக்கு மரியாதையை செலுத்திய ஆதித்தமிழர் பேரவையினர்
******************
கற்பி! ஒன்றுசேர்!! புரட்சிசெய்!!!
தோழர்களுக்கு வணக்கம்,
இன்று நெல்லையில் பகுத்தறிவாளர்
தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றும் விதமாகவும், தமிழகத்தில் தொடர்ந்து சாதிவெறி,
அடிப்படை மதவெறி,ஆணவப்படு கொலைகள்,பெண்கள் மீதான வன்முறைகள்,கருத்துரிமை பறிப்பு,கல்வி உரிமை சிதைப்பு,மாநில உரிமை மறுப்பு என நீளூம் பார்ப்பனிய பயங்கரவாதத்தை வேரறுப்போம் என வலியுறுத்தி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,
"தீபாவளி புறக்கணிப்பு மேற்க்கொள்ளப்பட்டது"
வீர வணக்க நிகழ்வு நடைப்பெற்றது.
நான் யாருக்கும் அடிமை இல்லை
எனக்கு யாரும் அடிமை இல்லை---புரட்சியாளர்
அறியாமையுடன் நூறு ஆண்டுகள்
வாழ்வதை விட
அறிவுடன் ஒரு நாள் வாழ்வதும்
ஆள்வதும் மேல் ----புத்தர்
அவமானம் என்பது என் மக்களின்
விடுதலைக்காக நான் பயன்படுத்தும்
ஊக்கமருந்து ---திருவளவன்
இவண்
தென்.திருவளவன்
ஆதி தமிழர் பேரவை
நெல்லைமாவட்டம்.

No comments:

Post a Comment