அண்மையச்செய்திகள்

Thursday, 7 December 2017

திசம்பர்.9 இராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சமூகநீதி பாதுகாப்பும் கருத்தரங்கம்.

திசம்பர்.9
இராமநாதபுரத்தில்
""""""""""""""""""""""""""""""""""

சமூகநீதி பாதுகாப்பும்
கருத்தரங்கம்.
""""""""""""""""""""""""""""""""""
கருத்துரை:-
சமூகநீதிக் காவலர்
அய்யா அதியமான்.

தமிழக தன்னாட்சியும்
இடம்:-
தாஜ் திருமண மகால்
புதிய பேரூந்து நிலையம்.
பிற்பகல் 3 மணி
அனைவரும் வருக!
தன்னாட்சியை மீட்போம்!
சமூகநீதியை காப்போம்!
"""""""'''''''''"""""""""""""'"'""""""''''’
மாநில சுயாட்சி என்பது அந்தந்த மாநிலங்கள் தங்களுகான முன்னேற்றத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்கின்ற தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருப்பது. அப்படி இருந்தால்தான் சமூகநீதியை பாதுகாக்கவும் அல்லது விரிவுபடுத்தவும் அதிகாரம் மிக்க கருவியாக இருக்க முடியும். எனவே மாநில சுயாட்சியை மீட்பது சமூக நீதியை காப்பதற்கு ஒப்பானதாகும்.
ஆனால் மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே தமிழக உரிமைகள் பறிபோகின்றது, சமூக நீதியை பாதுகாப்பதற்கு மாநிலத்திற்கு சுயாட்சி வேண்டும்.
தமிழகத்தின் கல்வி கொள்கையை தமிழகம் தான் நிர்ணயம் செய்ய வேண்டும்.
கல்வி கொள்கை மாநில அதிகாரத்தின் கீழ் இருந்திருந்தால் ‘நீட்’ தேர்வு வந்திருக்காது. மாநில பட்டியலில் இருந்த அந்த அதிகாரத்தை 1975–ம் ஆண்டு பொதுபட்டியலுக்கு மத்திய அரசு கொண்டு வந்தது, இன்று வரை அந்த அதிகாரம் பொதுப்பட்டியலில்தான் உள்ளது.
கல்விக் கொள்கை மாநில பட்டியலில் இருந்திருந்தால் ‘நீட்’ தேர்வை தடுத்திருக்கலாம், எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தற்போதைய பிரதமர் மோடி எல்லா அதிகாரமும் தனக்கே வேண்டும் என்று கூறுகிறார். குஜராத்துக்கு மாநில சுயாட்சி வேண்டும் என்று போராடியவர், தற்போது மாநில சுயாட்சி முக்கியம் இல்லை என்று கூறி வருகிறார்.
அமெரிக்காவில் 5 மாநிலங்களில் மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளது. அதுபோல் இந்தியாவில் தமிழகத்துக்கு மாநில சுயாட்சி அதிகாரம் வரவேண்டும். மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதம் என்று நினைக்கிறார்கள். இது பிரிவினைவாதம் அல்ல மாநில முன்னேற்றம்.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்திலும், சமவாய்ப்புள்ள சமூகமாக அனைத்து சமூகத்தையும் கட்டமைக்க சமூகநீதி இன்றியமையாதது, அந்த சமூகநீதியை பாதுகாக்க, விரிவுபடுத்த வேண்டும் என்றால் தமிழகம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுயாட்சி மாநிலமாக மாற வேண்டும்.
___________________________
தன்னாட்சியை மீட்போம்!
சமூக நீதியைக் காப்போம்!
""""""""""""""”""""""""""""""""""""""""
இராமநாதபுரம் மாவட்டம்.
_______________________
ஆ.நாகராசன்,
பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a comment