அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

கோவை மாநகரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

கோவை மாநகரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
***********

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் வழிகாட்டுதலின் பேரில்..
கோவையில்.... புரட்சியாளர்
அம்பேத்கருக்கு பொதுச்செயலாளர் தலைமையில் வீரவணக்கம்!
"""""""'''''''''''''''''''''''’''''''''''''''""""""""'''''''''' கோவை மாநகரம் சார்பில் டாபாபாத் இந்திய உணவுக் கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் சிலைக்கு பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாநிலக்குழு உறுப்பினர் தி.செ.கோபால், புறநகர் மாவட்ட அமைப்புச்செயலாளர் வானுகன், மாநகரப் பொறுப்பாளர், உக்கடம் முனுசாமி, ஆட்டோ தொழிலாளர்கள் சரவணன், ஆனந்தன், முருகேசன் உள்ளிட்ட மாநகர இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு முழக்கங்களுடன், உறுதியேற்பு நடைபெற்றது.

அம்பேத்கர் என்றாலே ஆனந்தம்தான்!
பிறந்த நாளோ,
நினைவு நாளோ எந்த நாளாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டோருக்கு திருவிழாதான்!

இருள்சூழ்ந்த சேரிகளுக்கு ஒளியூட்டிய நெருப்பல்லவா?

எம்மை தலைநிமிர்த்திய தலைவருக்கு, நாடெங்கும் பேரவையினர் வீரவணக்கம்!
No comments:

Post a comment