அண்மையச்செய்திகள்

Sunday, 10 December 2017

சேலம் மாவட்ட ஆதித்தமிழர் மாணவர் பேரவையின் ஆலோசனை கூட்டம் இன்று (10-12-17) நடைபெற்றது

சேலம் மாவட்ட ஆதித்தமிழர் மாணவர் பேரவையின் ஆலோசனை கூட்டம் இன்று (10-12-17) நடைபெற்றது
***********
ஆதித்தமிழர் மாணவர் பேரவையின்
சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று காலை 11:00 மணியளவில் சாரதாஸ் லாட்ஜில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தோழர்கள் அஜித், சுபாசு, சிலம்பரசன், கவின்,ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக
மாநில செயலாளர் துரை.மாதேசு,
மாநில இ.து.செயலாளர் வெ.வீரசிவா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஓமலூர்,காடையாம்பட்டி, நங்கவள்ளி, சங்ககிரி, எடப்பாடி ஒன்றியங்களில் இருந்து சுமார் 15 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவர் பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தின் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
**********************
1)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளி மாணவ/மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்துவதை தமிழக அரசு தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என ஆதித்தமிழர் மாணவர் பேரவை வலியுறுத்துகிறது.
2)உயர் கல்வி நிலையங்களில் ரோகித் வெமுலா,முத்துக்கிருஷ்ணன், சரவணன், தற்போது ஜோயல் பிரகாஸ் எனத் தொடரும் சாதி,மத ரீதியான படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என ஆதித்தமிழர் மாணவர் பேரவை வலியுறுத்துகிறது.
3)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பிற மாநிலத்தவர் பங்கேற்க அனுமதி அளித்த தமிழக அரசை ஆ.மா.பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
4)TNPSC விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஆதித்தமிழர் மாணவர் பேரவை வலியுறுத்துகிறது.
உள்ப்பட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a comment