அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க??? --- திருவள்ளூர் மாவட்டத்தில் சாதிவெறி தாக்குதல்

இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க???
""""""""""""""""""""""""""""""""""""""""""
சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் சாதிகள் பார்க்கப்படுவதில்லை என்கிற மனநிலை உள்ளவர்களே,! உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் ....!!
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே நிமிலிசேரி பகுதியில் " நீயெல்லாம் எங்களோட பொருளாதாரத்தில் சமநிலையில் இருக்கக் கூடாது, அப்படியும் நீ இருந்தாலும் சக்கிலியன், சக்கிலியன் தானே " என்கிற மனநோய் பிடித்த இந்து சாதித் தமிழன் தேவர் சமூகத்தைச் சார்ந்த அதே பகுதியில் வசிக்கும் முருகானந்தம், சந்தனக்குமார் மற்றும் சில இந்து தமிழ்ச்சாதி வெறியர்களால் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன்.இவரது மனைவி விஜயா ஆகியோர்கள் மீது கடந்த 14-12-2017 கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட வெங்கட் ராமன், விஜயா இருவரும் சென்னை இராஜிவ் காந்தி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்ய வக்கில்லாத பட்டாபிராம் காவல்துறை வழக்கை IPC யில் பதிவு செய்ய துடிக்கிறது.
குற்றவாளிகளை தப்ப வைக்க காவல் துறை முயல்கிறது.
களத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்No comments:

Post a comment