அண்மையச்செய்திகள்

Monday, 11 December 2017

ஆர்கேநகரில் அய்யா அதியமான் அவர்கள் திமுக சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை

ஆர்கேநகரில் அய்யா அதியமான் அவர்கள் திமுக சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை
****************

அய்யா அவர்களின் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்

வருகின்ற 21-12-17 அன்று ஆர்கேநகர் சட்டமன்ற இடைத்தேர்தலின் அனைத்து கட்சி பிரச்சார கூட்டம் 11-12-17 அன்று ஆர்கேநகர் தொகுதி தண்டையார்பேட்டையில் வைத்து நடைபெற்றது,இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு திமுக வெற்றி வேட்பாளர் தோழர் மருதுகணேஷ் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சார உரை ஆற்றினார்,அதன்போது தமிழக மக்களுக்கு திராவிடர் முன்னேற்ற கழக  செய்த நன்மைகளையும் இம்மக்களுக்கு கலைஞர் ஆற்றிய பெரும் உழைப்பையும் தலைவர் கலைஞர் போலவே இன்றைக்கு திமுக செயல் தலைவர் ஆற்றிக்கொண்டிருக்கின்ற மக்கள் தொண்டிற்காகவும் பெரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு ,பிரச்சார மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்கும் கூட்டத்தில் நிரம்பியிருந்த மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு தந்து உரையை தொடங்கினார்,

அறிஞர் அண்ணா அவர்கள் தன்னாட்சி கேட்டு பேசுகின்ற போது ஒரு கருத்தை சொன்னார் ,"ஆட்டுக்கு தாடியும் தேவையில்லை இந்த நாட்டிற்கு கவர்னரும் தேவையில்லை" என்ற கருத்தை முன் வைத்தார் , அதுபோல் இன்று தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அவலம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது, தமிழக ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு மாவட்டங்களில் சென்று அங்கிருக்கும் அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இது போன்ற ஆழ தகுதியற்றவர்களால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஆட்சி போல் இதுவரை நடந்தது கிடையாது. இந்த அவல ஆட்சிக்கு முடிவு கட்டுவதுற்கு தான் இன்றைக்கு இந்த ஆர் கே நகர் தேர்தல் அமைந்திருக்கிறது  தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியிலே தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கவனிக்கப்பட்டார்கள் . குறிப்பாக சமூகத்தில் அடித்தட்டில்  இருக்கின்ற அருந்ததியர் மக்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டு அவர்களுக்கு கல்வியிலும் , வேலை வாய்ப்பிலும் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திய ஆட்சியாக கலைஞர் ஆட்சி நடந்தது, அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு நமது செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று கொண்டு நிச்சயமாக வருங்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று  தமிழ்நாட்டில் மூளை முடுக்குகளில் உள்ள மக்கள் எல்லாம் இன்றைக்கு சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.

ஆயிரம் மீனவர்களை கன்னியாகுமரியில் காணவில்லை ஆனால் முதலமைச்சர் எந்த கவலையுமின்றி வாக்கு சேகரிப்பது மட்டுமே குறிக்கோளாய் இங்கு அலைந்து கொண்டிருக்கிறார், இதை விட கொடுமை மத்தியிலே மோடி அரசு ஒரு மதவாதத்தினுடைய உச்சபட்ச கொடுமையினையம் அதன் பெயரில் இந்த நாட்டிலே பிளவை ஏற்படுத்த கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது அந்த வகையிலே தான் தொடர்ந்து பல்வேறு இடங்களிலே கூறுகின்ற செய்திகளையெல்லாம் திரித்து கூறி நீங்கள் அப்படி பேசவில்லை இப்படி பேசிவிடீர்கள் என்று கூறிக்கொண்டு அதற்காக நாங்கள் தீக்குளிப்போம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், தயவு செய்து அப்படிச்சொல்கிறார்வர்கள் அதனை செய்யுங்கள் , யார் அந்த தீக்குளிப்பு செய்வோம் என்று சொல்கிறீர்களோ அதனை செய்யுங்கள் நாங்கள் பார்க்கிறோம் . இந்த மக்களுக்கு ஒரு விடிவு காலம் வேண்டுமென்றால் தீக்குளிப்போம் என்று அறிவித்தவர்களெல்லாம் காணாமல் போகின்ற காட்சி வருகிற 21ம் தேதி நடைபெறுகிற இந்த ஆர்கேநகர் இடை தேர்தலிலே இம்மக்கள் தீர்மானிப்பார்கள் செயல் தலைவரினுடைய கரத்தை வலுப்படுத்துவார்கள் ,தோழர் மருது கணேஷ் வெற்றி பெறப்போவது உறுதி உறுதி என்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் அவருக்கு நல்வாழ்த்துக்களை கூறி எனது பிரச்சார உரையை முடிக்கிறேன்  என தனது உரையை முடித்து கொண்டார்

No comments:

Post a comment