அண்மையச்செய்திகள்

Friday, 15 December 2017

தொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

 தொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவை நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்


 அய்யா அதியமான் செய்தியாளர்கள் சந்திப்பு  காணொளி


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் குச்சிக்காடு பகுதியைச் சுரேஷ் படுகொலையைக் கண்டித்தும்,
ரிக்வண்டி உரிமையாளர் கொலைகாரன் தனசேகரனுக்கு வழக்கு முடியும் வரை பிணை வழங்ககூடாது எனவும்,
இதுவரை காணாமல் போனர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்.

சுரேஷ் படுகொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, உடுமலை சங்கர் வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தண்டனை போல தண்டனை வழங்க வேண்டும் எனவும்,
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் வழங்கப்பட வேண்டிய உரிய தீருதவிகளை வழங்கிட வேண்டும் எனவும்,
ரிக்வண்டி வேலைக்கு அழைத்து செல்லப்படும், தொழிலார்களை பாதுகாக்க, அவர்களின் விபரங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும்,
மேலும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும்.
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நாமக்கல் பேரூந்து நிலையம் பார்க் சாலையில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 15.12.2017 காலையில் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் அய்யா அதியமான் அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். பொதுச்செயலாளர், நாகராசன், து.பொ.செயலாளர், சந்திரன், ஊடகவியல் செயலாளர். வீரவேந்தன், தூய்மைத் தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன், உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், நாமக்கல் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாட்டினை, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார். சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி..
-ஆ.நாகராசன்.
15.12.2017


No comments:

Post a comment