அண்மையச்செய்திகள்

Sunday 26 November 2017

வேலைக்கு சென்ற தந்தை எலும்புக் கூடாய்..மூன்று குழந்தைகள் தவிப்பு

*வேலைக்கு சென்ற தந்தை எலும்புக் கூடாய்..*
*மூன்று குழந்தைகள் தவிப்பு*
""""""""''''""'''"""""""""""""""""
ஒருமாசம் ஆகுது ஏம்மா இன்னும் அப்பா வரல.. எங்க மேல அப்பாவுக்கு பாசமே கிடையாதா?
அப்பா வந்தா திங்கிறதுக்கு ஏதாவது வாங்கித் தருவாரு, ஸ்கூலுக்கு போகும் போது சாக்லெட் வாங்கி கொடுத்து முத்தம் கொடுத்து அனுப்பி வைப்பாரு.. எப்பமா வருவாரு அப்பா..
என கடந்த ஒரு மாதகாலமாக அப்பாவை காண ஏங்கிக் கிடக்கும் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தை போக்குவதற்கு, பதில் ஏதும் தெரியாத நிலையில், இன்று வருவார் நாளை வருவார் என்று குழந்தைகளுக்கு சமாதானம் சொல்லி தேற்றுவதோடு, கணவர் என்ன ஆனார்! அவரிடம் இருந்து ஒரு போன் கூட வரவில்லையே என ஒவ்வொறு நாளையும் ஒரு யுகமாக கழித்து வந்த சுரேசின் மனைவிக்கு நேற்று வந்த தொலைபேசி அழைப்புதான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உனது கணவர் சத்தியமங்கல காட்டில் மரங்களின் இடுக்கில் சிக்கி பிணமாக கிடக்கிறார், நீ வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்பதே அந்த தொலைபேசியின் தகவல்! பேசியது நாமகிரிப்பேட்டை காவல் அதிகாரி ஒருவர்.
தொலைபேசி தகவலைக் கேட்டு, இதயமே நின்று போன சுரேசின் மனைவி, இரவு முழுவதும் அழுது புலம்பிய நிலையில், அங்கு கிடப்பது தனது கணவரின் உடலாக இருக்கக் கூடாது என ஊரில் உள்ள கடவுள்களை எல்லாம் இரவு முழுவதும் வேண்டியுள்ளார்.
இரவு கழிந்தது பொழுது விடிந்தது (25.11.2017) அதிகாலையில் சத்தியமங்கலத்திற்கு புறப்பட்டு பண்ணாரியைத் தாண்டி மைசூர் போகும் வழியில் எத்தனையோ வளைவுகள், அதில் 28 வது வளைவில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போன சுரேசின் மனைவியிடம், மரத்தின் இடுக்கில் சிக்கி கிடந்த உடலை காட்டிய போது, அந்த உடலில் மேல் அணிந்திருந்த பேண்ட்டும் பெல்ட்டும் தனது கணவரதுதான் என்று தெரிந்தவுடன் மயக்கம் அடைந்து விட்டார்.
உடலை கைப்பற்றி கொண்டு வர முயற்சி செய்த போது, சுரேசின் மண்டை ஓடும், கை கால் எழும்புகள் மட்டும்தான்! கிடைத்தது.
கடந்த 20.10.2017 அன்று கடத்தப்பட்ட சுரேசை 23 ஆம் தேதி பொம்மைக் குட்டை மேட்டில் வைத்து படுகொலை செய்து, இரண்டு மூன்று வாகனங்களில் உடலை மாற்றி மாற்றி எடுத்துச் சென்று, இறுதியாக மைசூருக்கு சரக்கு ஏற்ற சென்ற லாரி போல ஒரு லாரியை செட்டப் செய்து, பூபதி, சிலம்பரசன் ஆகிய ஓட்டுனர்களைக் கொண்டு, ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் உள்ள ஓய்வெடுக்கும் படுக்கையில் கிடத்தி, செக் போஸ்டுகளை கடக்கும் போது, சுரேசை தூங்குவதாக சொல்லி ஏமாற்றி, 28 வது வளைவில் சுரேசின் உடலை இறக்கி கை கால்களை ஆளுக்கு ஒருவர் பிடித்து வீசி எறிந்துள்ளனர்.
அப்படி வீசி எரியப்பட்ட சுரேசின் உடல்தான் தற்போது எலும்புக் கூடாக கிடைத்துள்ளது. இந்த உண்மைகள் அனைத்தையும் ஒத்துக் கொண்டது. பூபதியும் சிலம்பரசனும்தான்!
இந்த கொலைச் சம்பவத்தில், மகாலட்சுமி ரிக் வண்டி உரிமையாளர் தனசேகரன், அவனது தம்பி மைத்துனர், இன்னொரு ஓனர்.. என பெரிய நெட் ஒர்க் கும்பல் ஈடுபட்டு உள்ளது.
இந்த கும்பல்களுக்கு பைனான்ஸ் செய்வது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமிகள் கரூர் பைனான்சியர்களாம்!
இதுவரை ரிக் வண்டி வேலைக்கு சென்று வீடு திரும்பாதோர் எண்ணிக்கை 30 யும் தாண்டுமாம்,
ஆதித்தமிழர் பேரவையின் விடா முயற்சியும், சமரசமாகாத போர் குணமும்தான் சுரேசின் கொலையை கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது,
ரிக் வண்டி உரிமையாளர்களின் மறுபக்கத்தை முழுமையாக கண்டுபிடித்து இது வரை காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்கப் பேரவையின் முயற்சி தொடரும்,
குறிப்பு:- சுரேசின் எலும்புகள் DNA பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்கள் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ளது, நாளை மறுநாள் உடலின் பாகங்களை சுரேசின் உறவினர்களிடம் காவல்துறை ஒப்படைக்குமாம்!
அப்பாவின் ஏக்கத்தில் கிடக்கும் மூன்று குழந்தைகளுக்கு எந்த உறுப்பைக் காட்டி தேற்றப் போகிறாரோ சுரேசின் மனைவி.
--நாகராசன்
ஆதித்தமிழர் பேரவை.
25.11.2017 இரவு 11.17

No comments:

Post a Comment