அண்மையச்செய்திகள்

Sunday, 12 November 2017

கம்பத்தில் தூய்மை தொழிலாளர் பேரவை நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்

இழிவை ஒழிப்போம்!
சுரண்டலை தடுப்போம்!!
அதிகாரமிக்கவர்களாய், ஆதித்தமிழர்களாக்குவோம்!!!
***************************
தேனி மாவட்டம், கம்பம் நகர ஆதித்தமிழர் பேரவை - ஆதித்தமிழர் மாணவரணி பேரவை சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வும், கருத்தரங்கமும் இன்று (12-11-2017) கம்பம்.பட்டாளம்மன் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்க்கு சிறப்பு கருத்துரையாளராக ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவையின் மாநில நிதிச்செயலாளர் தோழர் நீலக்கணலன் அவர்களும் செயலாளர் தோழர் பெரு.தலித்ராஜா ஆகியோர்கள் பங்கேற்று கருத்துரை நிகழ்த்தினார்கள்.ஆதித்தமிழர் மாணவர் பேரவை , ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை , ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்


No comments:

Post a comment