அண்மையச்செய்திகள்

Monday, 6 November 2017

அதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அறிவிப்பு!

மாநில நிர்வாகிகள் அறிவிப்பு!
""""""'""""'"""""""""""""""""""""""
அதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகக் குழு கூட்டம் 5.11.2017 ஈரோட்டில் கூடியது.
பேரவை நிறுவனர் அய்யா அதியமான் தலைமையில் நடைபெற்ற நிவாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
தீர்மானம்.1
சட்டப்பேரவை தொகுதி!
"""""""”""""""""""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவை நிர்வாகம் ஏற்கனவே மாநிலம், மாவட்டம், ஒன்றியம் கிளை என கட்டமைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது, தற்போது கூடுதலாக சட்டப்பேரவை தொகுதிப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படும் என மாநில நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இந்த நிர்வாக சீரமைப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமை செய்யப்படும் என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்.2
உறுப்பினர் சேர்க்கை!
"""""""""""""""""""""""""""""""""
ஒவ்வொறு ஆண்டிற்கான உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் 2017 திசம்பர் 15 ல் தொடங்கி, 2018 சனவரி 15 க்குள் முடிக்க வேண்டும் என்று இந்த நிர்வாகக் குழு முடிவு செய்கிறது.
தீர்மானம்.3
புதிய நிர்வாகிகள்!
"""""""""""""""""""""""""""""
மாநில துணைப் பொதுச்செயலாளராக தமிழரசு அவர்களும், தேன்மொழி அவர்களும் நியமிக்கபடுவதோடு, பேரவை அணிகளின் நிர்வாகம் விரிவு படுத்தப்பட்டு மாநில இளைஞர் அணி செயலாளராக மதுரை செல்வம் அவர்களும், மாநில மாணவர் அணி செயலாளராக மாதேசு அவர்களும், மாநில மகளிர்அணி செயலாளராக வீ.மு.இந்திரா அவர்களும், தூய்மைத் தொழிலாளர் பேரவை மாநில செயலாளராக மதுரை ராஜா அவர்களும், தொழிலாளர் பேரவை துணைச் செயலாளராக நெல்லை ஒண்டிவீரன்.முருகேசன் அவர்களும், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளராக சேலம் கிழக்கு மாவட்ட வாழப்பாடி செல்வக்குமார் அவர்களும், புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து பேரவை நிறுவனர் அறிவிப்பு செய்தார்.
தீர்மானம்.4
மாநாடு!
""""""""""""""""
எதிர்வரும் 6.4.2018 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் கல்வி, பொருளியல், அரசியல் விடுதலைக்கான "உழைக்கும் மக்கள் உரிமை மாநாடு" நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்.5
தூய்மைத் தொழிலாளர்கள்
"''''''""""""""""""""''
மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னையை தூய்மைப் படுத்த, சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து தூய்மைத் தொழிலாளர்கள் எவரையும் அழைத்து செல்லக்கூடாது என தமிழக அரசை இந்த நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்.6
உயிர் பாதுகாப்பு
"'''''''''''''''''''''''''''''''''''''''''''
டெங்கு நோயிலும், கந்துவட்டிக் கொடுமையிலும் உயிரிழக்கும் உழைக்கும் மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இந்த நிர்வாகக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்.7
கொத்தடிமை ஒழிப்பு
''''''''''"""""""""""""""'"""""""""
நாமக்கல் மாவட்டத்தில் ரிக்வண்டியில் தொழில் செய்யும் பல தொழிலாளர்கள் மர்மமான முறையில் காணாமல் போவது வழக்கமான ஒன்றாக மாறிவருகின்றது. கடந்த 21.10.2017 அன்று ராசிபுரம் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சுரேஷ் என்ற இளைஞன் கடத்தப்பட்டு காணமல் போனதால் அவரது தாயார் புகார் கொடுத்துள்ளார். அவர் உயிருடன் இருக்காரா இல்லையா என்று இதுவரை தெரியாத நிலையே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்வண்டி உரிமையாளர்கள், அண்டை மாநிலங்களில் தங்கி வேலை செய்ய சில ஆயிரங்களை முன்பணமாகக் கொடுத்து, ஏறக்குறைய கொத்தடிமைகளாக பல தொழிலாளர்களை ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் செல்கிறனர், அப்படி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கட்டடோ அல்லது தவிற்க முடியாத சில காரணங்களுக்காகவோ வீட்டிற்கு செல்லவேண்டும் என்று கேட்டால், அவர்கள் மர்மமான முறையில் காணமல் போய்விடுகின்றனர், இதைப் போன்ற புகார்கள் இதுவரை 10 க்கும் மேற்பட்டவை வந்துள்ளதாக காவல்துறையே தெரிவிக்கின்றது. எனவே இது தொடர்பான உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த, உண்மை நிலையை கண்டறிய, தமிழகஅரசு விசாரணைக் கமிசன் ஒன்றை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நிர்வாகக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
________________________
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை.
5.11.2017.

No comments:

Post a comment