அண்மையச்செய்திகள்

Wednesday 22 November 2017

கோவையை சூழும் காவி இருள்! - ஜனநாயக இயக்கங்களின் போராட்ட அறிவிப்பால் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈசா அடையாளம் அகற்றம்! - பொதுச்செயலாளர்

கோவையை சூழும் காவி இருள்!
"""""""""""""""""""""""""""""”""""""”"""""
ஜனநாயக இயக்கங்களின் போராட்ட அறிவிப்பால்
சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈசா அடையாளம் அகற்றம்!
*****************************
சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் கோவையின் அடையாளமாய் ஈசா யோகா மையத்தின் சின்னத்தை பொருத்திய சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் அதை அகற்றியுள்ளது.தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என பெருமையுடன் அழைக்கப்படும் கோவையின் அடையாள மாக தனியார் கார்ப்பரேட் சாமியாரின் ஈசா யோகா மடத்தின் சின்னம் கோவை சேரன் விரைவுரயில் பெட்டிகளில் பொருத்தப் பட்டிருந்ததை தீக்கதிர் நாளிதழ்அம்பலப்படுத்தியது. கோவைமாவட்டத்தின் பிரபலங்களின் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தது.

இது அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தி யில் கடும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் உருவாக்கியது. மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பெரும்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சமூக நீதிக்கட்சி, தந்தைபெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தார்பூசி அழிக்கும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களையும் அறிவித்திருந்தன. ஏற்கெனவே கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து வலுவான போராட்டங்களை அனைத்துக் கட்சிகள் நடத்திக்கொண்டிருக்கிறது.

மேலும், மண்டல பாஸ் போர்ட் மையத்தை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தோடு இணைக்கும் ஏற்பாடுகளை கண்டித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், கோவையின் அடையாளமாக ஈசா யோகா மையத்தின் சின்னத்தை பொருத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பல்வேறு அமைப்புகளின் போராட்ட அறிவிப்பு என்பது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என மத்திய உளவுப்பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அவசர அவசரமாக ரயில்வே நிர்வாகம் செவ்வாயன்று இரவே அனைத்துரயில் பெட்டிகளிலும் ஒட்டப்பட்டி ருந்த ஈசாவின் அடையாளத்தை மாற்றி கோவை ரயில்நிலையத்தின் முகப்பு படத்தை கோவையின் அடையாளமாக ரயில் பெட்டிகளில் பொருத்தியுள்ளது.

ஆ .நாகராசன்
பொதுச்செயலாளர்
ஆதித்த்தமிழர் பேரவை


No comments:

Post a Comment