அண்மையச்செய்திகள்

Sunday, 12 November 2017

கம்பம் நகராட்சி அலுவலித்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்

கம்பம் நகராட்சி அலுவலித்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்
*****
தற்போது கம்பம் நகராட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோட்டை குரு தலைமையில் முருகன் முன்னிலையில் மோக.இளவேந்தன்Bscநெ.ராம்செழியன்BAவீர.அம்பேத்கோடி.MA நிர்வாகிகள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.இம்முற்றுகை போராட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். ஒப்பந்த துப்பரவு பணியாளர்களுக்கு கடந்த மூன்று மஆதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் நகராட்சி அதிகாரகளை கண்டித்து ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர்கள் பேரவை தோழர்களோடு மாணவர் பேரவை,ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் இம்முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர் மேலும் இத்தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட PFபணத்தை உடனடியாக வழங்க கோரியும் ,பிரதி மாதம் முதல் தேதியிலேயே ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கிட வேண்டுய் ,கம்பம்நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் அரசானை படி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய முழு சம்பளத்தை முழுமையாக வழங்கிட வேண்டும்,மேலும் இது போன்று தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்களை கண்டு கொள்ளாத தமிழக அரசை கண்டிக்கிறோம் என்ற கோரிக்கை முழக்கத்தோடு முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.
13-11-2017


 

No comments:

Post a comment